குடியரசு தின தொடர் விடுமுறை…சென்னையில் இருந்து ஊருக்கு போக 800 பேருந்துகள் தயார்…இன்று முதல் இயக்கம்!
Government Special Buses : குடியரசு தின விழா தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்று மற்று நாளை சுமார் 800 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வருகிற ஜனவரி 26- ஆம் தேதி ( திங்கள் கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் ஆகும். இதனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இவர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, சென்னையில் இருந்து சுமார் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து 550 பேருந்துகள்
அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, கும்பகோணம், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், கன்னியாகுமரி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும், கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம் திருவண்ணாமலை ஓசூர் வேளாங்கண்ணி பெங்களூர் ஆகிய ஊர்களுக்கும், இதே போல, கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை சனிக்கிழமை ( ஜனவரி 24) திருப்பூர் கோயம்புத்தூர் பெங்களூர் ஈரோடு ஆகிய ஊர்களுக்கும், கோயம்பேட்டில் இருந்தும் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகளானது இன்று மாலை முதல் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: குடியரசு ’26-26′ என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்.. பாதுகாப்பு வளையத்தில் டெல்லி..




சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்காக
இதேபோல மாதவரம் பகுதியில் இருந்தும் 23,24- ஆம் தேதிதகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 3 நாட்கள் விடுமுறை முடிந்து ஜனவரி 26- ஆம் தேதி ( திங்கள்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் என 800 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போல, தெற்கு ரயில்வே சார்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்கு இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புறப்படுகிறது சிறப்பு ரயில்
அதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 11:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06135) மறுநாள் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தை சென்றடையும். இதே போல, ஜனவரி 26 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ( வண்டி எண் 06136 ) இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை ஜனவரி 27 காலை 10 15 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். இந்த ரயிலில் 3 அடுக்கு கொண்ட 18 ஏசி பெட்டிகள் உள்ளன.
மேலும் படிக்க: Republic Day 2026: குடியரசு தினம் என்றால் என்ன..? இந்த நாள் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏன் முக்கியம்?