Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடியரசு தலைவர் மாளிகைக்கு கோவை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு அழைப்பு – யார் இந்த சங்கீதா?

Woman Auto Driver Achievement: கோயம்புத்தூரில் பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு குடியுரசு தின விழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யார் இந்த சங்கீதா? எதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குடியரசு தலைவர் மாளிகைக்கு கோவை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு அழைப்பு – யார் இந்த சங்கீதா?
குடியரசு தின விழாவுக்கு பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு அழைப்பு
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Jan 2026 20:47 PM IST

கோயம்புத்தூர், ஜனவரி 15 : கோயம்புத்தூரைச் (Coimbatore) சேர்ந்த ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்தில் பங்கேற்கவும் அழைப்பு வந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை, கோயம்புத்தூரில் பெண் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் சங்கீதா தான். கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா, கடந்த 7 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். அவருடைய கணவர் பாலாஜி கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிகிறார். சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீடுகளில் வாழ்ந்து வந்துள்ளனர்.

மாதம் சுமார் ரூ.15,000 வருமானத்தில் குடும்பச் செலவுகளை சமாளித்த அவர்கள், தங்களுடைய இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்து வருகின்றனர். தற்போது அவர்களது மகன்களில் ஒருவர் கல்லூரியில் பயின்று வருகிறார். மற்றொருவர் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சொந்த வீடு என்பது அவர்களுடைய நீண்ட நாள் கனவாக இருka/cந்து வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்தும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். அதன் மூலம் ரூ.2.10 லட்சம் நிதி உதவி கிடைத்தது. இதனுடன், மாவட்ட கூட்டுறவு வங்கியில் இருந்து கடன் பெற்று, பிரதம மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் சொந்த வீடு கட்டி குடியேறினர்.

இதையும் படிக்க : ‘காசி-தமிழ் சங்கமம்’.. பிரதமர் மோடி பிளாக் எழுதி பெருமிதம்!!

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைப்பு

தன் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் தனது வாழ்க்கையில் உயர்ந்த சங்கீதாவுக்கு, தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் தேநீர் விருந்தில் பங்கேற்க அதிகாரப்பூர்வ அழைப்பு கிடைத்துள்ளது. இதை அறிந்த குடும்பத்தினரும், அண்டை வீட்டாரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோவையில் ஆட்டோ ஓட்டி வரும் சங்கீதா இதுவரை சென்னைக்கே போனதில்லையாம். இந்த நிலையில் அவருக்கு டெல்லியில் குடியரசு தின மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்ப சூழ்நிலையை உணர்ந்த சங்கீதா குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும் தனது சொந்த வீடு கனவை நிறைவேற்றவும் ஆட்டோ ஓட்டுகிறார்.

இதையும் படிக்க : தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!

கோவையில் கடந்த 7 ஆண்டுகளாக ஓட்டி வரும் சங்கீதா, கொரோனா காலகட்டத்திலும் தனது பணியை விடாமல் தொடர்ந்துள்ளார். அவரது கடின உழைப்பாலும் மத்திய மாநில அரசுகளின் உதவியாலும் தன் சொந்த வீடு கனவை நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் பெண்கள் மனது வைத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அவரது வாழ்க்கை துவண்டு கிடக்கும் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.