AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வட தமிழகத்தை நெருங்கும் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

தித்வா புயல் தற்போது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு தெற்கில் 380 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து நவ.30ல் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடலை அடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

வட தமிழகத்தை நெருங்கும் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 Nov 2025 14:45 PM IST

சென்னை, நவம்பர் 29: தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால், இதுவரை ஆபத்தான அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், போக்குவரத்து பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அதிகாரிகள் அளித்த தகவலின்படி, 16 கால்நடைகள் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், 24 குடிசைகள் சேதமடைந்து இடிந்துள்ளதாகவும் கூறிய அவர், இச்சேதங்களைப் பற்றி ஆய்வு நடைபெற்று வருவதுடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சென்னைக்கு நாளை தான் மழையின் ஆட்டம் இருக்கும் – வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்..

நாகையில் அதிக மழை:

கடந்த 24 மணி நேரத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தோப்புத்துறை உள்ளிட்ட இரு பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதாக கூறிய அவர், அங்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார். 28 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 10 குழுக்கள் பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவைக்க உள்ளோம். விமானப்படை மற்றும் கடலோர காவல் படைக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாளை பாதிப்பை பொறுத்து தேவையான மாவட்டங்களுக்கு கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை ஒட்டியே புயல்:

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பில், ‘தித்வா’ புயல் சென்னைக்குள் வராமல் சென்னையை ஒட்டி செல்லும் வாய்ப்பே அதிகம். புயல் அருகில் இருக்கும் வேளையில், இன்று மற்றும் நாளை கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று வானிலை துறை உறுதியான எச்சரிக்கை வழங்கியுள்ளது. புயல் சென்னையை தாக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், அதற்கான தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துள்ளோம். திருமண மண்டபங்களை தற்காலிக முகாம்களை மாற்ற அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக, புயல் சீற்றத்தின்போது செல்பி எடுக்க முயன்று கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க: முடிவுக்கு வந்தது ஸ்டிரைக்:18 நாட்களுக்குப் பிறகு வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்கம்!

நிவாரண நடவடிக்கைகள் தீவிரம்:

பயிர் மற்றும் படகு சேதங்களை கணக்கிடும் பணிகள் நவம்பர் 30-ம் தேதிக்குப் பின்னர் தொடங்கும். சேத மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்ததும், அதன் அடிப்படையில் நஷ்டஈடுகளை உடனடியாக வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதோடு, புயல் தொடர்பான ஒவ்வொரு முன்னேற்றத்தையும் முதல்வர் ஸ்டாலின், நேரடியாக கண்காணித்து வருகிறார். புயல் கரையை கடக்கும் வரை தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Follow Us