AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்! வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை..!

Kovai Rains: தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே ஒரு வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், தென்கிழக்கு அரபிக் கடலுக்கு மேல் லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

Sekaran S
Sekaran S | Published: 02 Jun 2026 19:54 PM IST

கோவை (Kovai) பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேம்பாலம் கட்டிய வருடத்தில் இருந்தே முழுவதுமாக முடிக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. மழை வரும்போது அருவியாக இந்த மேம்பாலம் மாறுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று அதாவது 2026 ஜூன் 2ம் தேதி பெரியநாயக்கன்பாளையத்தில் பலத்த மழை (Heavy Rain) பெய்ததால் மேம்பாலத்திலேயே மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நின்றது.

ALSO READ: கோவையில் திடீரென மோப்ப நாயுடன் களமிறங்கிய போலீஸ் படை.. ஆம்னி பேருந்துகள் சல்லடை சல்லடையாக அலசல்.. என்ன காரணம்!

ஒரு சில இடங்களில் மழைநீர் வடிய அமைக்கப்பட்ட பைப் உடைத்து அதில் இருந்து வெளியேறும் மழைநீர் மோட்டர் பம்பில் இருந்து வரும் நீர் போல குபுகுபு என கொட்டுகிறது. மேலும் பாலத்தில் இடுக்கில் இருந்து நீர் அருவிபோல கொட்டி வருகிறது. மேம்பாலத்தின் அடியே வரும் வாகனங்கள் இந்த அருவியில் குளித்து கொண்டுதான் வருகிறது. குறிப்பாக பேருந்துகள் முழுவதுமாக மேம்பால அருவியில் நனைந்தப்படி வருகிறது. யாரை குறைகூறுவது என்று மக்களுக்கு தெரியவில்லை. இந்த மேம்பாலத்திற்கு எப்போதுதான் விடிவுகாலம் வரும் என்று மக்கள், வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனர்.

நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே ஒரு வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், தென்கிழக்கு அரபிக் கடலுக்கு மேல் லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதுமட்டுமின்றி, வருகின்ற 2026 ஜூன் 7ம் தேதி தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: 22 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும் ?

தொடர்ந்து கோவை, நீலகிரி, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை அதாவது 2026 ஜூன் 3ம் தேதி இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை மறுதினம் 2026 ஜூன் 4ம் தேதி வரை கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Follow Us