AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

22 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும் ?

ஒருபக்கம் மழை பெய்து வந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. வரக்கூடிய நாட்களிலும் ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பநிலை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும் ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Jun 2026 06:25 AM IST

ஜூன் 2, 2026: தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் தினசரி நல்ல மழை பதிவாகி வருகிறது. சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல், 3.1 கிலோமீட்டர் முதல் 7.6 கிலோமீட்டர் உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

அதனைத் தொடர்ந்து, 1.5 கிலோமீட்டர் உயரம் வரை விதர்பா முதல் தெற்கு கேரளம் பகுதிகள் வரை தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இதன் காரணமாக, ஜூன் 2ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோவையில் சடலமாக மீட்கப்பட்ட மேற்கு வங்க நபர்.. பகீர் சம்பவம்!

ஜூன் 5ஆம் தேதியைப் பொருத்தவரையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கரூர், சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜூன் 6ஆம் தேதியைப் பொருத்தவரையில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

100 டிகிரி கடந்து பதிவாகும் வெப்பநிலை:

ஒருபக்கம் மழை பெய்து வந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. வரக்கூடிய நாட்களிலும் ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பநிலை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சென்னையின் மீனம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும், தஞ்சாவூரில் 39 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 39 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 38.6 டிகிரி செல்சியஸ் மற்றும் கரூரில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Follow Us