ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா இதுவரை சுமார் 5 லட்சம் வீரர்களை இழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை பிரிட்டனின் உளவுத்துறை வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் தகவல் தொடர்பு மற்றும் சைபர் உளவுத்துறை அமைப்பின் தலைவர் அன்னி கீஸ்ட் பட்லர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது முழுமையான படையெடுப்பை தொடங்கியதிலிருந்து, சுமார் 5 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.