ஜூன் 1 முதல் நாடு முழுவதும் பல முக்கிய நிதி மற்றும் வங்கி விதிமுறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த மாற்றங்கள் குடும்ப செலவுகள், வங்கி சேமிப்புகள், கடன் மற்றும் அன்றாட நிதி பரிவர்த்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதலில், ஒவ்வொரு மாதமும் போல ஜூன் 1ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் மறுஆய்வு செய்ய உள்ளன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் சந்தை நிலவரத்தைப் பொறுத்து வீட்டு பயன்பாட்டு மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்படலாம்.