உலகின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஒருவருக்கே தற்போதைய சூழலில் வேலை கிடைக்கவில்லை என்ற தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி, உலகளாவிய ஐடி வேலைவாய்ப்புச் சந்தையின் தற்போதைய அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் பெருநிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கைகள் லட்சக்கணக்கான ஊழியர்களைப் பாதித்துள்ளன.