தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் அறவே இருக்கக்கூடாது என்பதே முதல்வரில் உத்திரவாதம் – அமைச்சர் விக்னேஷ்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் அறவே இருக்கக்கூடாது என்பதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உறுதியான உத்தரவாகும். போதைப்பொருள் இல்லாத உண்மையான தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது அரசின் இலக்கு. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் ஒரு சதவீதம் கூட போதைப்பொருட்கள் புழக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த தலைமுறையைக் காப்பாற்றி, அவர்களை ஆரோக்கியமான தலைமுறையாகeZTOHSLb உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் லட்சியம். அதற்காக மிகவும் தீவிரமான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்." என பேசியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் அறவே இருக்கக்கூடாது என்பதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உறுதியான உத்தரவாகும். போதைப்பொருள் இல்லாத உண்மையான தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது அரசின் இலக்கு. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் ஒரு சதவீதம் கூட போதைப்பொருட்கள் புழக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த தலைமுறையைக் காப்பாற்றி, அவர்களை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் லட்சியம். அதற்காக மிகவும் தீவிரமான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.” என பேசியுள்ளார்.
