சுற்றுச்சூழல் ஆர்வலரும், கனடா நாட்டைச் சேர்ந்த ‘மரங்களின் காதலருமான’ அண்டோயின் மோசஸ் கென்யாவின் மொம்பாசா கடற்கரைப் பகுதியில் வெறும் 24 மணி நேரத்தில் 47,460 மா மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் தனது வாழ்நாளின் இரண்டாவது கின்னஸ் உலக சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.மா மரக்கன்றுகளை நடுவது என்பது சாதாரண உடல் உழைப்பு அல்ல; அது உடலுக்கு மிகவும் சவாலானது. கடல் அலைகள் உள்வாங்கிய பின், சேறும் சகதியுமாக முழங்கால் அளவு ஆழமுள்ள ஈர நிலத்தில் நின்றுகொண்டு, உடலை வளைத்துத் தொடர்ச்சியாக மரங்களை நட வேண்டும்.