AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய் – வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் வருகிற ஜூன் 28, 2026 ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஜூன் 28, 2026 அன்று பாலவாக்கம் ஆதி திராவிடர் அரசு பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கிவைக்கவுள்ளார்.

போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்  – வெளியான அறிவிப்பு
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Jun 2026 19:48 PM IST

சென்னை, ஜூன் 25 : நாடு முழுவதும் வருகிற ஜூன் 28, 2026 ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை பாலவாக்கம் ஆதி திராவிடர் அரசுப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஜூன் 25, 2026 அன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்

நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜூன் 28, 2026 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் வருகிற ஜூன் 28, 2026 அன்று பாலவாக்கம் ஆதி திராவிடர் அரசு பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கிவைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அரசு கடன் வாங்குவதில் தவறில்லை, தமிழகத்துக்கு நிதி நிலுவை இல்லை… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஜூன் 28, 2026 அன்று சென்னை முழுவதும் உள்ள 1,641 மையங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 5.56 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் ஏற்கனவே வழக்கமான போலியோ தடுப்பூசி மருந்துகளைப் பெற்றிருந்தாலும், இந்த கூடுதல் சொட்டு மருந்தையும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

தொடர்ச்சியாக 29வது ஆண்டாக இந்தியா முழுவதும் இத்தீவிர போலியோ தடுப்பு முகாம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. மேலும், 100 சதவிகித இலக்கை எட்டும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் நகரம் முழுவதும் 1,641 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இம்மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

நகர்ப்புறச் சமுதாய நல மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் இம்மையங்கள் அமைக்கப்படும். மேலும், மெரினா கடற்கரை மற்றும் கோயம்பேடு சென்னை புறநகர் பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 52 நடமாடும் தடுப்பூசி மையங்களும் செயல்படும்.

இதையும் படிக்க : அமோனியா வாயு கசிவு உயிரிழப்பு சம்பவம்.. 3 பேர் குழு அதிரடி விசாரணை.. முதல்வரிடம் விரிவான அறிக்கை தாக்கல்!

அரசு ஊழியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 6,564 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். எந்தவொரு குழந்தையும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய, சொட்டு மருந்து செலுத்தப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் அழியாத மை கொண்டு அடையாளம் இடப்படும்.

கோயம்புத்தூரை பொறுத்தவரை இந்த ஆண்டு ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 2.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த முறை 3.01 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,615 போலியோ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; இதில் 1,124 மையங்கள் கிராமப்புறங்களிலும், 491 மையங்கள் நகர்ப்புறங்களிலும் அமைந்துள்ளன. இது தவிர, வழக்கமான முகாம்களில் விடுபடக்கூடிய குழந்தைகளைச் சென்றடையும் வகையில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் மற்றும் பிற பொது இடங்களில் 32 சிறப்பு மையங்களும் 22 நடமாடும் குழுக்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us