AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து? சதீசன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை!

CM Vijay Kerala Visit Cancelled : கேரள மாநில முதல் அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முதல்வர் அலுவலகம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து? சதீசன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை!
முதல்வர் விஜய் கேரள பயணம் ரத்து
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 17 May 2026 21:25 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழகம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், கேரள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான யூ. டி. எஃப். கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதில், கேரள மாநிலம் முதல் அமைச்சராக வி.டி. சதீசன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா நாளை திங்கள்கிழமை திருவனந்தபுரத்தில் ( மே 18- ஆம் தேதி) நடைபெற உள்ளது.

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் விஜய் பங்கேற்கவில்லை

இந்த விழாவில்,  பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி, மற்றொரு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கேரள முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள கேரள முதல்வர் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

மேலும் படிக்க: பிரதமர் மோடி வேண்டுகோள்: தமிழக ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் 4- ஆக குறைப்பு!

விஜய் கேரள பயணம் ரத்து ஏன்

இதற்கான காரணம் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை முதல்வர் அலுவலகம் தரப்பிலிருந்து வெளியாகவில்லை. மேலும், முதல்வர் பயணத்துக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. கேரள மாநிலத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதில், முதல்வர் தேர்வில் நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியாக வி. டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டார்.

21 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு

இவருடன் சேர்ந்து 21 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது.  இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியான இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து 5 எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம் பெற உள்ளனர். இந்த விழாவில் ராகுல் காந்தியுடன் சேர்த்து முதல்வர் விஜய் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் படிக்க: முதல்வராக முதல் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஜோசப் விஜய்.. நேரம் ஒதுக்க கோரிக்கை!

Follow Us