பீஸ்ட் முதல் சிஎம் வரை.. வைரலாகும் விஜய்யின் பிளாக் கோட் சூட்.. “CM Vijay Look” பெயரில் விற்பனை அமோகம்..!
CM Vijay Black And White Coat Suit: தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அணிந்திருக்கும் கருப்பு - வெள்ளை நிற கோட் சூட் போன்ற ஆடைகள் சிம் லுக் என்ற பெயரில் காம்போவாக ரூ.4,000 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன்படி, முதல் அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த மே 10- ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் போது கருப்பு நிற கோட் சூட் அணிந்திருந்தார். அது முதல் தற்போது வரை கோட் சூட் அணிந்தே தலைமைச் செயலகத்துக்கு வருகை தருகிறார். இதன் காரணமாக, விஜய் அணிந்திருக்கும் கோட் சூட் அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. திரையுலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்த நடிகராக இருந்த விஜய் அரசியலிலும் தனது தோற்றத்தின் மூலமாக கவனத்தை ஈர்த்து வருகிறார். இதில், அவரது கருப்பு வெள்ளை நிற கோட் சூட் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. திரைப்படங்களில் நடித்த காலம் முதல் தற்போது வரை அவர் பயன்படுத்திய உடைகள் ரசிகர்கள் மத்தியில் ட்ரண்டாக மாறியுள்ளது.
திரைப்படங்களில் விஜய் அணிந்த ஆடைகள்
அதன்படி, விஜய் நடித்த படங்களான மதுர, கில்லி, துப்பாக்கி, மாஸ்டர், லியோ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் அணிந்த ஜாக்கெட்டுகள், சட்டைகள், காலணிகள், பேண்ட்டுகள் உள்ளிட்டவை ரசிகர்களால் அதிக அளவு இணையதளத்தில் தேடப்பட்ட வந்தன. பல்வேறு இணையதள விற்பனை நிறுவனங்களிலும், ஜவுளி கடைகளிலும் விஜய் ஸ்டைல் ஷர்ட், தளபதி லுக் என்ற பெயர்களில் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதே போன்று அரசியலுக்கு விஜய் வந்த நிலையில் வெள்ளை நிற சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்தவாறு மாநாடு, கட்சி பொதுக் கூட்டங்கள், தேர்தல் பரப்புரை ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார்.
விஜய்யின் தனிப்பட்ட அடையாளமாக மாறிய ட்ரஸ் கோடு
இந்த ஆடை தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் பயன்படுத்தி வந்த அரசியல் தோற்றமாக இருந்தாலும், விஜய் அணிந்த பின்னர், அது அவரது தனிப்பட்ட அடையாளமாக மாறிப்போனது. குறிப்பாக விஜயின் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் டிரஸ் கோடு போல பின்பற்ற தொடங்கினர். அதன்படி, வாக்குப்பதிவு நாளிலும் ஏராளமான இளைஞர்கள் வெள்ளை நிற சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்தவாறு வந்திருந்தனர்.




கருப்பு – வெள்ளை நிற கோட் சூட் விற்பனை
இந்த நிலையில், விஜய் அணிந்துள்ள கருப்பு நிற கோட் சூட் புதிய ட்ரண்ட் ஆக மாறி உள்ளது. அதன்படி, ஜவுளி கடைகளில் கருப்பு, வெள்ளை நிற கோட் சூட் அதிக அளவில் விற்பனையாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை பயன்படுத்திக் கொண்ட சில ஜவுளிக்கடை நிறுவனங்கள் சிஎம் விஜய் லுக், தளபதி அபிஷியல் ஸ்டைல் என்ற பெயரில் கோட் சூட் காம்போக்களை சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதன் விலை ரூ.4,000 ஆகும். இதில், கருப்பு நிற பேண்ட், வெள்ள நிற சட்டை, கருப்பு நிற கோட், கருப்பு நிற ஷு ஆகிய காம்போவாக விற்கப்படுகிறது.
மேலும் படிக்க: