தமிழக முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு… பரபரப்பை கிளப்பி இன்பதுரை எம்.பி.!
Possibility Of CBI Filing Case Against Vijay: குதிரை பேர விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக அதிமுக எம்பி இன்ப துரை கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்கள் இல்லாத காரணத்தால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழக வெற்றி கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. அத்துடன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களான எஸ். பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் போது ஆதரவாக வாக்களித்தனர். இதேபோல, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் மன்னார்குடி எம்எல்ஏவான காமராஜ் என்பவரும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த எஸ். பி. வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்தது தொடர்பாக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்த இன்பதுரை எம்பி உள்ளிட்டோர் தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எம்எல்ஏக்களை தன் கட்சியில் இணைப்பதற்காகவும், கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காகவும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் படிக்க: நீலாங்கரை டூ தலைமைச் செயலகம்.. 17 கிலோமீட்டர்… 400 போலீசார்… முதல்வர் விஜய்யின் ‘பவர்ஃபுல்’ கான்வாய் பயணம்!




முதல்வர் விஜய் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு
இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் குதிரை பேர குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர். இதற்கு, முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை எனவும், குதிரை வேகத்தில் அரசு செயல்படுவதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக தமிழக முதல்வர் விஜய் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக அதிமுக எம்பி ஆன இன்பதுரை பகிரங்க கருத்தை முன்வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் உள்பட இருவர் மீது சிபிஐ வழக்கு
அதில், கடந்த 1993- ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக ஜே. எம். எம். எம்பிக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாகவும், அந்த எம்எல்ஏக்களின் ஆதரவை குறுக்கு வழியில் பெற்றதாகவும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் பூட்டான் சிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து இருந்தது. அதே பாணியில் முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: “முதல்வர் விஜய் வீட்டுக்கு முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்?”.. விடாமல் துரத்தும் பிரேமலதா விஜயகாந்த்