கலைஞர் கனவு இல்லம் திட்டம்… ரூ.19,694 கோடியில் 4.29 லட்சம் வீடுகள்!
Kalaignar Kanavu Illam Scheme: தமிழகத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் ரூ.19,694 கோடி மதிப்பீட்டில் சுமார் 4.29 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2030- ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் குடிசை வீடுகள் அனைத்தையும் அகற்றிவிட்டு, கான்கிரீட் வீடுகள் கட்டி தர வேண்டும் என்று திமுக தனது இலக்காக வைத்திருந்தது. அதன்படி, வருகிற 2030 -ஆம் ஆண்டுக்குள் சுமார் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அறிமுகம் செய்த கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் பெயரை கனவு இல்லம் திட்டம் என மாற்றி தற்போது வரை ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக தலா ரூ.3.50 லட்சம் வீதம் மொத்தமாக சுமார் 2 லட்சம் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ், 2 ஆண்டுகளில் 1,79,850 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு
இதை தொடர்ந்து, நிகழாண்டிலும் மேலும் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் 2026- ஆம் ஆண்டு வரை 1,79,850 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது, 1,20,150 வீடுகள் கட்டப்படுகின்றன. இதே போல, இலங்கை தமிழர்களுக்கு ரூ.589 கோடியில் 10,045 நிரந்தர வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, 7,469 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.3,058 கோடியில் சுமார் 2.63 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை – இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்




ரூ.19,674 கோடியில் 4.29 லட்சம் வீடுகள் கட்டுமானம்
மேலும், கட்டுமான பணி அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின் கீழ், 8,384 கோடி மதிப்பீட்டில் 58,211 கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 53,467 வீடுகள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் மொத்தமாக ரூ.19,694 கோடி மதிப்பீட்டில் சுமார் 4, 29,394 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகள் இன்றி வசித்து வரும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், அவர்கள் சொந்த வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையிலும் தமிழக அரசு சார்பில் கலைஞரின் கனவு வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2030-க்குள் குடிசையில்லை தமிழகத்தை உருவாக்க இலக்கு
இந்த திட்டத்தின் கீழ், தகுதி உடைய நபர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுவதுமான கான்கிரீட் கூரையுடன் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 4.29 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும். 3000 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. 2030-க்குல் இந்த இலக்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்.. வானிலை நிலவரம் இதோ..