மானாமதுரை அருகே கைதி மரணத்தில் சந்தேகம்? குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு
Custodial Torture Allegations : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே போலீஸாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். அது குறித்து பார்க்கலாம்.
சிவகங்கை, மார்ச் 8 : சிவகங்கை (Sivaganga) மாவட்டம் மானாமதுரை அருகே போலீஸாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சியோன் நகர் என்ற பகுதியை சேர்ந்த நண்பர்களான ஜெயபாண்டி மர்றும் அழகர் இருவரையும் மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜெயபாண்டி மர்றும் அழகுசாமி இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் (Ambulance) மூலம் சிவகங்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவ் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல் நிலையத்தில் கைதி மர்ம மரணம்?
இந்த நிலையில் ஜெயபாண்டி மற்றும் அழகுசாமி ஆகியோரை தாக்கிய 3 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்த மானாமதுரை நகர காவல்துறையினர், மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு பைக் நம்பர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலையும் 5 டிகிரி வரை உயரும்.. வானிலை நிலவரம்..




இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மூவரில் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதில் ஆகாஷ் என்பவர் தப்பி ஓடும் முயற்சியில் பசலை பாலத்தில் இருந்து குதித்ததாக கூறப்படுகின்றனர் பின்னர் அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் சிறையில் இருக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனயைடுத்து அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆகாஷ் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட மூதாட்டி – மாயமான வேலைக்காரியைத் தேடி பறக்கும் தனிப்படை!
குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு
போலீஸ் காவலில் இருந்த கைதி தற்போது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ஆகாஷா காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய அவரது தந்தை, ஆகாஷை கைது செய்த காவல்துறையினர் அவரை உடனடியாக காவல்நிலையம் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அவரை கற்களை வைத்து காலை உடைத்துள்ளனர். மார்ச் 7, 2026 அன்று ஆகாஷ் எங்களிடம் நன்றாக பேசினார். ஆனால் அவர் மார்ச் 8, 2026 அன்று திடீரென உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கிறார்கள். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றார்.