AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சடலமாக மீட்கப்பட்ட காதலர்கள் – ஆணவக்கொலையா? – 5 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடி என்ற பகுதியில் காதலர்களான இளைஞர் மற்றும் 16 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சடலமாக மீட்கப்பட்ட காதலர்கள் – ஆணவக்கொலையா? – 5 பேர் கைது
சடலமாக மீட்கப்பட்ட காதலர்கள்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Jul 2026 07:07 AM IST

மயிலாடுதுறை, ஜூலை 1 : மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடி பகுதியில் காதலர்களான இளைஞர் மற்றும் 16 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக சிறுமியின் தந்தை லட்சுமி காந்தன் உள்ளிட்ட நால்வர் மீது உயிரிழந்த பார்த்திபன் ஏற்கனவே அளித்திருந்த புகாரின் அடிப்படையில், 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, லட்சுமி காந்தன் தவிர்த்து நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட காதலர்கள்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர், தனது ஊருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் காதலிப்பது பற்றி சிறுமியின் வீட்டுக்கு தெரிய வர இருவரது குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் தங்கள் மகனை தாக்கி விட்டதாக கடந்த ஜூன் 29, 2026 அன்று இரவு சிறுமியின் பெற்றோர் புகாரளித்திருக்கின்றனர்.

இதையும் படிக்க : திருச்செந்தூர் போறீங்களா? நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை – மீறினால் பறிமுதல்

இந்த சம்பவத்தில் ஜூன் 29, 2026 நள்ளிரவில் இளைஞரின் தந்தை மற்றும் சிறுமியின் உறவினர் 3 பேர் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் விசாரணை முடிந்து இளைஞரின் தந்தை வீட்டுக்கு வந்து பார்த்த போது இளைஞர் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இளைஞரை இரவு முழுவதும் தேடியிருக்கின்றனர். மற்றொரு பக்கம் சிறுமியையும் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்தநிலையத்தில் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் மாயமான இளைஞரின் செல்போன் டவர் லொகேஷனை வைத்து காவல்துறையினர் தேடியபோது அது சிறுமியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருப்பது தெரிய வந்தது. காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது கீற்று கொட்டகையில் காதலர்கள் இருவரும் சடலமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பிரச்னை ஏற்படாமல் இருக்க அந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனையடுத்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரதசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க : அதிகாரிகள் விதிகளுக்கு உள்பட்டு சுதந்திரமாக செயல்படலாம்… முதல்வர் ஜோசப் விஜய்!

சிறுமியின் குடும்பத்தினர் தான் இருவரையும் கொன்றுவிட்டதாக இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், சிறுமியின் வீட்டை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சம்பந்தப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை லட்சுமி காந்தன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

Follow Us