திருவண்ணாமலையை அச்சுறுத்தும் அரை நிர்வாண கொள்ளையர்கள்.. அச்சத்தில் பொதுமக்கள்!
A Group Of Thieves In Tiruvannamalai | திருவண்ணாமலையில் நள்ளிரவில் அரை நிர்வாண கோலத்தில் வீடுகளுக்குள் புகும் கொள்ளையர்கள், நொடி பொழுதில் கொள்ளை அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை, ஜூலை 01 : திருவண்ணாமலையில் (Tiruvannamalai), நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதிக்கும் அரை நிர்வாண முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருடிக்கொண்டு தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், திருவண்ணாமலையில் உருவெடுத்துள்ள இந்த புதிய கொள்ளையர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலையை அச்சுறுத்தும் அரை நிர்வாண கொள்ளையர்கள்
ஜூன் 27, 2026 அன்று நள்ளிரவு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் விசிறி சாமியார் ஆசிரமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சொர்ண பூமி நகர் 7 வது தெருவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரை நிர்வாண கோலத்தில் நுழைந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த அந்த கும்பல் ஒருசில நிமிடங்களில் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதையும் படிங்க : திருச்செந்தூர் போறீங்களா? நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை – மீறினால் பறிமுதல்
அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்
அந்த அரை நிர்வாண கொள்ளையர்கள் திருடிவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அவற்றை அடிப்படை ஆதாரமாக கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : இளைஞர்- இளம் பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. தற்கொலையா? ஆணவ படுகொலையா? பரபரப்பில் மயிலாடுதுறை!
போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலையில் உருவெடுத்துள்ள இந்த அரை நிர்வாண கொள்ளையர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தொடர்ந்து நடைபெறும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க பகல் நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.