Team India: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அசத்தல்.. டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய பதிவு செய்த இந்தியா!
IND vs AFG Test: ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாகும். அறிமுக வீரர் மானவ் சுதாரின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மானவ் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் (IND vs AFG) இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாகும். அறிமுக வீரர் மானவ் சுதாரின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மானவ் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.
ALSO READ: அட்டகாசம் செய்த அறிமுக வீரர்.. 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆப்கானிஸ்தான்!




564 ரன்கள் குவித்த இந்திய அணி:
Leaving New Chandigarh with a massive win under the belt 🇮🇳
A complete team performance from #TeamIndia 🤍
Scorecard ▶️ https://t.co/Au50EfVM30#INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/MxUFJHvoq4
— BCCI (@BCCI) June 8, 2026
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் சுப்மன் கில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரின் உதவியுடன் 126 ரன்கள் குவித்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார். மேலும், கே.எல். ராகுலும் 11 பவுண்டரிகளுடன் 100 ரன்களும், சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பண்ட் தலா 81 ரன்கள் எடுத்தனர். இதுமட்டுமின்றி வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்திருந்தார்.
பேட்டிங்கில் சொதப்பிய ஆப்கானிஸ்தான்:
2வது இன்னிங்ஸில் பேட் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த இன்னிங்ஸில் இந்தியாவுக்காக மானவ் சுதார் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ALSO READ: முதல் ஓவரில் விக்கெட்.. வரலாறு படைத்த அறிமுக வீரர் மானவ் சுதார்..!
இதையடுத்து இந்திய அணி, ஆப்கானிஸ்தானை ஃபாலோ-ஆன் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அப்போது, இந்திய அணி 412 ரன்கள் முன்னிலையில் இருந்தது, ஆனால் இம்முறை ஆப்கானிஸ்தான் அணி வெறும் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் சித்திகுல்லா அடல் 42 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். 3வது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும், மானவ் சுதர்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தனது மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது.