IND vs AGF: 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இந்தியா.. ஆப்கானிஸ்தான் பவுலர் சிறப்பு சாதனை..!
IND vs AFG 1st Innings: வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து இந்தியாவை 550 ரன்களைக் கடக்கச் செய்து, 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் முதல் இன்னிங்ஸில் இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
முல்லன்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்தியா (Indian Cricket Team) தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் கே.எல். ராகுல் (KL Rahul) (100) மற்றும் கேப்டன் சுப்மன் கில் (126) ஆகியோர் இந்தியாவுக்காக சதம் அடித்தனர். இதுமட்டுமின்றி சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பண்ட் தலா 81 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இருவரும் தங்களது சதத்தை எட்டத் தவறினர். இறுதியாக, வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து இந்தியாவை 550 ரன்களைக் கடக்கச் செய்து, 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் முதல் இன்னிங்ஸில் இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
ALSO READ: கே.எல்.ராகுல், கில் சதம்.. முதல் நாளில் 368 ரன்கள் குவித்த இந்திய அணி!
அசத்திய கே.எல்.ராகுல் – சுப்மன் கில்:
இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. முதல் நாளின் 3 செஷன்களிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி, ஒவ்வொரு செஷனிலும் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் கே.எல். ராகுலும் இன்னிங்ஸைத் தொடங்கினர். முகமது சலீம், ஜெய்ஸ்வாலை (24) முதல் விக்கெட்டாக ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் கே.எல். ராகுல், சாய் சுதர்ஷனுடன் இணைந்து 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 13 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்சன், தனது சதத்தைத் தவறவிட்டார்.




முதல் நாள் ஆட்டத்தின் மூன்றாவது விக்கெட், ஜியாவுர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார். முன்னதாக, கே.எல். ராகுல் தனது 100 ரன்கள் இன்னிங்ஸில் 11 பவுண்டரிகளை அடித்து சதத்தை எட்டினார். கேப்டன் சுப்மன் கில்லும் முதல் நாளிலேயே தனது சதத்தை எட்டினார். இது அவரது 10வது டெஸ்ட் சதம் மற்றும் கேப்டனாக 6வது சதமாகும். முதல் நாள் ஆட்டம் முடிவடைவதற்குள் ரிஷப் பண்ட் தனது அரைசதத்தை எட்டினார். முதல் நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்தது.
முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இந்தியா:
இரண்டாம் நாளில், ஒரு சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகளின் உதவியுடன் 126 ரன்கள் எடுத்த கேப்டன் சுப்மன் கில் முதல் விக்கெட்டை இழந்தார். பின்னர், சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ரிஷப் பண்ட், 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளின் உதவியுடன் 81 ரன்கள் எடுத்தார். தனது டெஸ்ட் அறிமுகப் போட்டியில் ஆடிய மானவ் சுதார், முதல் இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளின் உதவியுடன் 28 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு இருக்கும் 3 பெரிய சவால்கள்!
குல்தீப் யாதவுக்கு முன்பு களமிறங்கிய முகமது சிராஜ், ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளின் உதவியுடன் 12 பந்துகளில் 22 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடினார். 127வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஒரு பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார். அடுத்த ஓவரில் சுப்மன் கில் டிக்ளேர் செய்தார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 564/8 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.