2027 ODI World Cup: ஐபிஎல் 2026ஐ கண்காணிக்கும் தேர்வுக்குழு.. 2027 உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி!
Indian Cricket Team: ஒரே ஆண்டில் நடைபெறும் 2028 டி20 இலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ஐபிஎல், 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடவுள்ள 20 வீரர்களை கண்காணிக்கும். தேர்வு குழு முல்லன்பூரில் வருகின்ற 2026 ஜூன் 6 முதல் 10 வரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான சிறந்த அணியை களமிறக்கும்.
2027 ஒருநாள் உலகக் கோப்பை (2027 ODI World Cup) தொடங்க இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இந்தியாவின் 20 உத்தேச வீரர்கள் ஏற்கனவே தேர்வாகியுள்ளனர். வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரின்போது, 5 தேசிய தேர்வாளர்களும் இந்த வீரர்களை கண்காணிப்பாளர்கள் என் என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழுவில் எஸ்.எஸ்.தாஸ், ஆர்.பி.சிங், அஜஸ் ராத்ரா மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த உலகக் கோப்பையானது வருகின்ற 2027ம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
ALSO READ: ஜெர்சியின் 7ம் நம்பரை விட்டுக்கொடுக்கும் தோனி..? வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு! என்ன காரணம்?
ஐபிஎல் போட்டிகளை காணும் தேர்வுக்குழு:
தேர்வுக்கு உறுப்பினர்கள் போட்டிகளின்போது தத்தமது இடங்களில் இருப்பார்கள். மற்றவர்கள் போட்டிகளை தொலைக்காட்சிகளில் கண்காணிப்பார்கள். ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும். பிசிசிஐயின் மூத்த நிர்வாகி இதுகுறித்து கூறுகையில், “தேர்வுக்குழு என்பது பிசிசிஐயின் ஒரு துணைக்குழுவாகும். தேர்வாளர்களின் ஒப்பந்தங்கள் இந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ளன. அஜித் அகர்கரின் ஒப்பந்தம் வருகின்ற 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அதன்பிறகு, 2027ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வரை அவர் பதவியில் நீடிப்பாரா என்பதை பிசிசிஐ செயலாளரும், அஜித் அகர்கரும் முடிவு செய்வார்கள். இரு தேர்வாளர் 4 ஆண்டுகள் வரை அப்பதவியில் இருக்கலாம்.” என்றார்.




அஜித் அகர்கர் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களின் ஓய்வை தொடர்ந்து, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணி தேர்வை நியமித்து வருகிறார்.
கண்காணிப்பில் தேர்வுக்குழு:
அஜித் அகர்கர் மும்பையிலும், தாஸ் கொல்கத்தாவிலும், ஆர்.பி.சிங் மற்றும் ரத்ரா டெல்லியிலும், பிரக்யான் ஓஜா பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திலும் தங்களது ஐபிஎல் போட்டிகளை தீவிரமாக கண்காணிப்பார்கள். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், “ஒவ்வொரு தேர்வாளரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு போட்டியையாவது பார்க்க வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது. இதன்மூலம், வாரத்திற்கு 5 போட்டிகள் என்ற எண்ணிக்கை எட்டப்படும்.” என்றார்.
ALSO READ: சாம்சனுடன் ஒன்றாக அமர்ந்து பேசிய தோனி.. சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!
ஒரே ஆண்டில் நடைபெறும் 2028 டி20 இலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ஐபிஎல், 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடவுள்ள 20 வீரர்களை கண்காணிக்கும். தேர்வு குழு முல்லன்பூரில் வருகின்ற 2026 ஜூன் 6 முதல் 10 வரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான சிறந்த அணியை களமிறக்கும்.