IPL 2026: சாம்சனுடன் ஒன்றாக அமர்ந்து பேசிய தோனி.. சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!
Sanju Samson - MS Dhoni: ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தக பரிமாற்றத்தின் மூலம் மாற்றப்பட்டு, ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைந்தார். 2026 டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து சாம்சன் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதனை தொடர்ந்து, ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தனது முதல் போட்டியை வருகின்ற 2026 மார்ச் 30ம் தேதி குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டியில் எம்.எஸ். தோனியும் சஞ்சு சாம்சனும் முதல் முறையாக ஒன்றாக விளையாடுவதை காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், எம்.எஸ்.தோனியும் சஞ்சு சாம்சனும் ஒன்றாக அமர்ந்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ALSO READ: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகியது ஏன்..? சஞ்சு சாம்சன் விளக்கம்!




யார் முதன்மை விக்கெட் கீப்பர்..?
View this post on Instagram
சஞ்சு சாம்சன் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகிய இரு வீரர்களுமே விக்கெட் கீப்பர்கள் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. எம்.எஸ்.தோனி இம்பேக்ட் வீரராக விளையாடுவாரா என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால், தோனி மற்றும் சாம்சன் ஜோடியைக் காண ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பார்கள் என்பது நிச்சயம்.
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே முகாமில் நடந்த ஒரு சிறப்புத் தருணம் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. அணியின் புதிய வீரர் சஞ்சு சாம்சனுக்கும் , ஜாம்பவான் கேப்டன் எம்.எஸ். தோனிக்கும் இடையே நடந்த உரையாடல் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று அதாவது 2026 மார்ச் 19ம் தேதி வெளியிட்ட வீடியோவில் சாம்சனும் தோனியும் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தனர். இருவரின் முகத்திலும் புன்னகை தவழ்ந்திருந்தது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் ‘தல-சேட்டா’ அதிரடி ஆரம்பம் என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
ALSO READ: தோனிக்கு ஃபேர்வெல்? முன்னாள் வீரர்களை அழைத்த சிஎஸ்கே.. நிகழ்ச்சி எப்போது தெரியுமா?
வர்த்தகம் மூலம் வந்த சஞ்சு சாம்சன்:
ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தக பரிமாற்றத்தின் மூலம் மாற்றப்பட்டு, ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைந்தார். 2026 டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து சாம்சன் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் இதுவரை 5 போட்டிகளில் 321 ரன்கள் எடுத்ததுடன், தொடர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, அவர் அணியுடன் பயிற்சியில் இணைந்தார். சஞ்சுவின் வருகை சிஎஸ்கே அணிக்கு வருவது முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று பல ரசிகர்கள் நம்புகிறார்கள்.