IPL 2026: 2008 முதல் 2025 வரை.. ஐபிஎல்லில் பர்ப்பிள் மற்றும் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள் பட்டியல்!
IPL Orange and Purple Cap Winners: ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்னதாக ஒவ்வொரு சீசனிலும், அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு கேப்பும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளருக்கு பர்ப்பிள் கேப்பும் வழங்கப்படுகிறது. 2008-ல் ஷான் மார்ஷ் மற்றும் சோஹைல் தன்வீர் ஆகியோருடன் தொடங்கிய இந்த விருது, 2025 வரை பல ஜாம்பவான் வீரர்கள் வென்றுள்ளனர்.
ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் பிரமாண்டமாக மோதுகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bengaluru), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகிறது. ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்னதாக ஒவ்வொரு சீசனிலும், அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு கேப்பும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளருக்கு பர்ப்பிள் கேப்பும் வழங்கப்படுகிறது. 2008-ல் ஷான் மார்ஷ் மற்றும் சோஹைல் தன்வீர் ஆகியோருடன் தொடங்கிய இந்த விருது, 2025 வரை பல ஜாம்பவான் வீரர்கள் வென்றுள்ளனர். அதன்படி, கடந்த 2008ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை பர்ப்பிள் மற்றும் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்களின் பட்டியலை தெரிந்து கொள்வோம்.
2008 முதல் 2025 வரை ஐபிஎல்-லில் பர்ப்பிள் கேப் மற்றும் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள்:
ஐபிஎல் 2008:
முதல் ஐபிஎல் சீசனில் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர் பர்ப்பிள் கேப் வென்றார். ஐபிஎல் 2008ம் ஆண்டு சீசனில் சோஹைல் தன்வீர் மொத்தம் மொத்தமாக 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக, 2008ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சாம்பியன் பட்டத்தை வென்றது. முதல் ஐபிஎல் சீசனில் கிங்ஸ் XI பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காக விளையாடிய ஷான் மார்ஷ், 11 போட்டிகளில் 139 ஸ்டிரைக் ரேட்டில் 616 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்யை வென்ற முதல் பேட்ஸ்மேன் ஆனார்.
ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிக அணிகளுக்காக விளையாடிய 5 வீரர்கள்.. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் முதலிடம்!
ஐபிஎல் 2009:
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ருத்ர பிரதாப் சிங், ஐபிஎல் 2009-ல் பர்ப்பிள் கேப்பை வென்றார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ஆர்.பி. சிங், 16 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக, டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை வென்றது. மேத்யூ ஹேடன் 2009ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது ஆரஞ்சு கேப் வென்றார். அந்த சீசனில் ஹேடன் 12 போட்டிகளில் 144 ஸ்டிரைக் ரேட்டில் 572 ரன்கள் குவித்து அபாரமாக பேட்டிங் செய்தார்.
ஐபிஎல் 2010:
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய பிரக்யான் ஓஜா, ஐபிஎல் 2010-ல் பர்ப்பிள் கேப் வென்றார். அந்த சீசனில் 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் பிரக்யான் ஓஜா. 2010ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் 15 போட்டிகளில் 47 சராசரி மற்றும் 132 ஸ்டிரைக் ரேட்டுடன் 618 ரன்கள் குவித்து, ஆரஞ்சு கேப் வென்றார்.
ஐபிஎல் 2011:
ஐபிஎல் 2011 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக லசித் மலிங்கா மிகச் சிறப்பாக விளையாடி 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்றார். 2011ம் ஆண்டில், கிரிஸ் கெய்ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி 12 போட்டிகளில் 183 ஸ்டிரைக் ரேட்டில் 608 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வென்றார்.
ஐபிஎல் 2012:
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக மோர்னே மோர்கல் அற்புதமாகப் பந்துவீசி, 25 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்ப்பிள் கேப்பை வென்றார். கிரிஸ் கெய்ல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆரஞ்சு தொப்பியை வென்றார். 2012ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், 15 போட்டிகளில் 160 ஸ்டிரைக் ரேட்டில் 733 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 2 சீசன்களுக்கு ஆரஞ்சு கேப் வென்ற முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை கெய்ல் பெற்றார்.
ஐபிஎல் 2013:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டுவைன் பிராவோ, ஐபிஎல் 2013-ல் பர்ப்பிள் கேப்பைக் கைப்பற்றினார். அந்த ஆண்டு பிராவோ சிறப்பாகப் பந்துவீசி, மொத்தம் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் 2013ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மைக்கேல் ஹஸ்ஸி 17 போட்டிகளில் 129 ஸ்டிரைக் ரேட்டில் 733 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வென்றார்.
ஐபிஎல் 2014:
ஐபிஎல் 2014 தொடரில் மோஹித் ஷர்மா சிறப்பாகச் செயல்பட்டு 23 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்றார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா, ஐபிஎல் 2014 தொடரில் 660 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வென்றார்.
ஐபிஎல் 2015:
டுவைன் பிராவோ ஐபிஎல் 2015-ல் இரண்டாவது முறையாக பர்ப்பிள் கேப்பை வென்றார். அந்த சீசனில் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் 2015 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் 14 போட்டிகளில் 156 ஸ்டிரைக் ரேட்டில் 562 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்றார்.
ஐபிஎல் 2016:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார், ஐபிஎல் 2016 தொடரில் தனது பந்துவீச்சால் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்றார். 2016 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய விராட் கோலி, 4 சதங்கள் உட்பட 973 ரன்களை எடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்ததற்கான இந்த சாதனை இன்றும் நிலைத்து நிற்கிறது.
ஐபிஎல் 2017:
ஐபிஎல் 2017ல் புவனேஷ்வர் குமார் சிறப்பாகப் பந்துவீசி 26 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பை வென்றார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர், ஐபிஎல் 2017ல் 14 போட்டிகளில் 141 ஸ்டிரைக் ரேட்டில் 641 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வென்றார்.
ஐபிஎல் 2018:
கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆண்ட்ரூ டை ஐபிஎல் 2018-ல் 14 போட்டிகளில் மொத்தம் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்றார். கேன் வில்லியம்சன் ஐபிஎல் 2018ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 17 போட்டிகளில் விளையாடி 735 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2019:
ஐபிஎல் 2019 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இம்ரான் தாஹிர் சிறப்பாகப் பந்துவீசி 26 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்றார். ஐபிஎல் 2019 தொடரில் டேவிட் வார்னர் 3வது முறையாக ஆரஞ்சு தொப்பியை வென்றார். வார்னர் 12 போட்டிகளில் 143 ஸ்டிரைக் ரேட்டில் 692 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2020:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய ககிசோ ரபாடா, ஐபிஎல் 2020 தொடரில் 17 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்றார். கிங்ஸ் XI பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காக விளையாடிய கே.எல். ராகுல், 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்றார்.
ஐபிஎல் 2021:
ஐபிஎல் 2021 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஹர்ஷல் படேல் ஆவார். இந்த சீசனில் மொத்தம் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஷல், பர்ப்பிள் கேப்பை வென்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் 2021 தொடரில் 16 போட்டிகளில் 136 ஸ்டிரைக் ரேட்டில் 635 ரன்கள் குவித்து, ஆரஞ்சு கேப் வென்றார்.
ஐபிஎல் 2022:
ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சாஹல், தனது சுழற்பந்துவீச்சில் மொத்தம் 27 பேட்ஸ்மேன்களை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பை வென்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ் பட்லர், ஐபிஎல் 2022 தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் 17 போட்டிகளில் 149 ஸ்டிரைக் ரேட்டில் 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்றார்.
ALSO READ: பர்பிள் கேப் பந்தயம்.. ஐபிஎல்லில் வெல்லாத 5 ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள்!
ஐபிஎல் 2023:
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பைக் கைப்பற்றினார். ஐபிஎல் 2023ல் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி 17 போட்டிகளில் 157 ஸ்டிரைக் ரேட்டில் 890 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வென்றார். ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் கில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் 2024:
ஐபிஎல் 2024 தொடரில் ஹர்ஷல் படேல் இரண்டாவது முறையாக பர்ப்பிள் கேப்பை வென்றார். இந்த சீசன் முழுவதும் ஹர்ஷல் சிறப்பாகப் பந்துவீசி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய விராட் கோலி, ஐபிஎல் 2024 தொடரில் 15 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் உள்பட மொத்தம் 741 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வென்றார்.
ஐபிஎல் 2025:
ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பிரசித் கிருஷ்ணா 15 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்றார். ஐபிஎல் 2025 தொடரில் சாய் சுதர்ஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 போட்டிகளில் 156 ஸ்டிரைக் ரேட்டில் ஒரு சதம் மற்றும் 6 அரைசதம் உள்பட 759 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வென்றார்.