AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: அடுத்தடுத்து காயம்.. கவலையில் அணிகள்.. ஐபிஎல்லில் விளையாட முடியாத வீரர்களின் பட்டியல்..!

IPL 2026 Injury Update: ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், வீரர்களின் காயம் மற்றும் உடற்தகுதி குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளில் வீரர்களின் காயம் குறித்த சமீபத்திய தகவல்களின் ஒரு தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

IPL 2026: அடுத்தடுத்து காயம்.. கவலையில் அணிகள்.. ஐபிஎல்லில் விளையாட முடியாத வீரர்களின் பட்டியல்..!
காயத்தால் அவதிப்படும் வீரர்கல்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Mar 2026 11:08 AM IST

இந்தியன் பிரீமியர் லீக்கானது (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. போட்டி தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், வீரர்களின் காயம் மற்றும் உடற்தகுதி குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளில் வீரர்களின் காயம் குறித்த சமீபத்திய தகவல்களின் ஒரு தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடர் முழுவதிலிருந்தும் விலக நேரிடலாம்.

ALSO READ: பெங்களூருவில் போட்டிகளை நடத்த அரசு அனுமதி – ரசிகர்கள் உற்சாகம்

சாம் கர்ரன்:

ராஜஸ்தான் – சென்னை பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சாம் கர்ரன் மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தனர். இந்த ஒரு வீரர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். சாம் கர்ரனின் இடமாற்றம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே மாற்று வீரர்களைத் தேடத் தொடங்கிவிட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாதன் எல்லிஸ்:

தொடை தசைநார் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் ஐபிஎல் 2026 தொடரில் விலகியுள்ளார். நாதன் எல்லிஸ் விலகியுள்ள நிலையில் அந்தப் பொறுப்புகளை மேட் ஹென்றி மற்றும் ஜேமி ஓவர்டன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், ஜெரால்ட் கோட்ஸி, ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் ஜோஷ் டங் உள்ளிட்ட வெளி வீரர்களை அணிக்குக் கொண்டுவருவது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

ஹர்ஷித் ராணா:

2026ம் ஆண்டு தொடக்கத்தில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டதைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா அணியிலிருந்து விலகியுள்ளார். சமீபத்தில் அவர் ஊன்றுகோல்களின் உதவியுடன் நடக்கும் வீடியோவும் வைரலானது.

வெளிநாட்டு வீரர்கள்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் காயமடைந்துள்ளதால், அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் முதல் சில போட்டிகளுக்கு அணியை வழிநடத்துவார். இஷான் மலிங்கா மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோரின் உடற்தகுதியும் சந்தேகத்தில் உள்ளது.

ALSO READ: ஐபிஎல்லில் மிக மெதுவாக அரைசதம்.. முதலிடத்தில் வெளிநாட்டு வீரர்..!

ஜாக் எட்வர்ட்ஸ்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும், காயம் குறித்த அறிவிப்பையோ அல்லது அதன் விலகலையோ அந்த அணி எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை.

Follow Us