AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘என்னை தொட்டால்.. 35 துண்டாக வெட்டுவேன்’ முதலிரவில் மிரட்டிய மனைவி.. ஷாக்கான கணவன்!

Uttar Pradesh Bride Threatens Groom : உத்தர பிரதேசத்தில் திருமணம் முடிந்து முதலிரவிற்கு வந்த கணவரை கத்தியை காட்டி மனைவி மிரட்டியுள்ளார். தன் மீது கை வைத்தால் 35 துண்டுகளாக வெட்டுவேன் என அந்த பெண் மிரட்டியுளார். இதனால், இரவு முழுவதும் உயிருக்கு பயந்து தூங்கவில்லை என கணவர் நிஷாந்த் கூறியுள்ளார்.

‘என்னை தொட்டால்.. 35 துண்டாக வெட்டுவேன்’  முதலிரவில் மிரட்டிய மனைவி.. ஷாக்கான கணவன்!
கணவனை மிரட்டிய பெண்Image Source: x/Pinterest
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Jun 2025 20:17 PM IST

உத்தர பிரதேசம், ஜூன் 26 : உத்தர பிரதேசத்தில் மாநிலத்தில் முதலிரவில் தனது கணவனை மனைவி கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை தொட்டால் 35 துண்டுகளாக வெட்டுவேன் என அந்த பெண் கணவரை மிரட்டியுள்ளார். இப்படியே தொடர்ந்து மூன்று நாட்களாக மிரட்டிய அந்த பெண், 4வது நாளாக தனது காதலுடன் சென்றுவிட்டதாக தெரிகிறது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் சித்தாரா (26). இவருக்கு நிஷாந்த் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் 2025 ஏப்ரல் 29ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.   இதன்பிறகு, திருமணத்தின் முதல் இரவில் கணவர் நிஷாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, முதலிரவில் மனைவியிடம் நெருக்கமாக நிஷாந்த் சென்றிருக்கிறார்.

“35 துண்டாக வெட்டுவேன்”

அப்போது, பெண் சித்தாரா, கணவனிடம் கத்தியை எடுத்து கோபமாக காட்டி இருக்கிறார். அதைத் கண்டதும் நிஷாந்த் அதிர்ச்சி அடைந்தார். கத்தியை காட்டியதுடன் பெண் சித்தாரா நிறுத்தால், பகீரங்கமாக மிரட்டியுள்ளார். அதாவது, தன்னை தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிக் கொன்று விடுவேன் என மிரட்டி இருக்கிறார்.

மேலும், நான் என் காதலன் அமனுக்கு சொந்தமானவள் என கூறி இருக்கிறார். அதைக் கேட்ட அதிர்ந்த நிஷாந்த், மனைவி சிந்தாரா தூங்கிய பிறகே, கண்களை அவர் மூடியுள்ளார். தொடர்ந்து, மூன்று இரவுகளும் இப்படியே சென்றதாக நிஷாந்த் கூறியுள்ளார். தான் தூங்கிய பின், தன்னை கொலை செய்துவிடுவார் என பயந்து, சிந்தாரா தூங்கிய பிறகே தான் தூங்குவதாக நிஷாந்த் பகிர்ந்துள்ளார்.

3 நாட்களுக்கு இப்படியே தொடர்ந்ததால், நிஷாந்த் மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில்  இது பற்றி அனைத்தையும் தனது தாயிடம் நிஷாந்த்  கூறியுள்ளார்.  2025 மே 3ஆம் தேதி இந்த விஷயத்தை நிஷாந்த் கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த நிஷாந்த் குடும்பத்தினர் சிந்தாராவை அழைத்து கேள்வி எழுப்பினர்.

முதலிரவில் நடந்த சம்பவம்

தான் ஒருவரை காதலிப்பதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும், நான் அவனுடன் தான் வாழ விரும்புகிறேன் எனவும் சிந்தாரா பதில் கொடுத்துள்ளார். இந்த விஷயம் இரு குடும்பங்களுக்கு இடையே பெரிய பிரச்னையாக மாறியது. இதனை அடுத்து, 2025 மே 25ஆம் தேதி உள்ளூர் பெரியவர்கள் முன்னிலையில் இரு குடும்பங்களுக்கு சந்தித்து பேசினர்.

அப்போது, தனது காதலுடன் வாழ விரும்புவாக பெண் சிந்தாரா தொடர்ந்து கூறினார். இதற்கிடையில், பெண் சிந்தாரா வீட்டில் இருந்து காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது. இது சம்பந்தமான வீடியோ சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அதில், வீட்டின் பின்பக்கம் சுவற்றில் ஏறி தப்பித்தது தெரியவந்தது. இந்த தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை நடந்து வருகிறது.  முதலிரவில் கணவனை மனைவி கத்தியை காட்டி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow Us