AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுபோதையில் அர்ச்சகர்கள் செய்த செயல்… பாய்ந்தது நடவடிக்கை.. என்ன நடந்தது?

Srivilliputhur Temple Incident : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறி செயல்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, நடவவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, தலைமறைவாக உள்ள அர்ச்சகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுபோதையில் அர்ச்சகர்கள் செய்த செயல்… பாய்ந்தது நடவடிக்கை.. என்ன நடந்தது?
அர்ச்சகர்கள்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Jun 2025 13:52 PM IST

விருதுநகர், ஜூன் 26 : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் மூன்று பேரும் சினிமா பாடலுக்கு நடனமாடியது மட்டுமில்லாமல், பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமான காட்சிகளை வெளியான நிலையில், அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது . பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் விசேஷங்கள் விமர்சையாக நடைபெறும். இக்கோயிலில் நடக்கும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில், பெரிய மாரியம்மன் கோயிலில் இந்த கோயிலுக்கு 2025 ஜூலை 2ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2025 ஜூன் 16ஆம் தேதி தான் முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுபோதையில் அர்ச்சகர்கள் செய்த செயல்

இந்த கோயிலில் அர்ச்சகர்கள் மூன்று பேர் சேர்ந்து நடனமாடியும், பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. தற்போது, இந்த விஷயம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது, பெரிய மாரியம்மன் கோயிலின் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன் இந்த வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

அதோடு, வீடியோ ஆதாரங்களுடுன் கோமதி விநாயகம் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அறநிலையத்துறை நடவடிக்கை

அந்த வீடியோவில், அந்த வீடியோவில், மது போதையில் இருந்த அர்ச்சகர்கள் மூன்று பேர் வீட்டில் சினிமா பாடலுக்கு ஆபாச நடனம் ஆடியதும், பெண் பக்தர்களின் முகத்தில் திருநீர் வீசுவதும் போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ வெளியாகி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து, அர்ச்சகர்கள் மூன்று பேர் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. அதாவது, வினோத், கணேசன், கோமதிநாயாகம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது.

எனவே, இதுபோன்ற  செயல்களில் அர்ச்சகர்கள் ஈடுபடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள அர்ச்சகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  பெண்களிடம் அத்துமீறிய அர்ச்சகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Follow Us