AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவாரூரில் பயங்கரம்.. மூதாட்டியை அடித்தே கொன்ற அதிமுக பிரமுகர்.. பகீர் பின்னணி!

Tiruvarur Crime News : திருவாரூர் மாவட்டத்தில் மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் ஆடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மூதாட்டியை கொலை செய்ததாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, அவரை கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

திருவாரூரில் பயங்கரம்.. மூதாட்டியை அடித்தே கொன்ற அதிமுக பிரமுகர்.. பகீர் பின்னணி!
கைதான அதிமுக பிரமுகர்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Jun 2025 16:07 PM IST

திருவாரூர், ஜூன்  26 : திருவாரூரில் மூதாட்டி அடித்தே கொலை (Elderly Woman Murder) செய்யப்பட்ட சம்பவம் (Tiruvarur Murder) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு கட்டுவதில் ஏற்பட்ட தகரறில் மூதாட்டியை அதிமுக பிரமுகர் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்தவர் 85 வயதான முத்துலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த முத்துலட்சுமி, வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது வீட்டிற்கு அருகே இருப்பவர் மலர்க்கொடி. இவர்கள் இரண்டு பேருக்கு அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. வீட்டின் அருகே ஆடு கட்டுவதில் இருவருக்கும் பிரச்சை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மூதாட்டி அடித்து கொலை

இந்த நிலையில், மலர்கொடியின் மகன் ஆனந்த பாபு, சம்பவத்தன்று மூதாட்டியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, மது போதையில் ஆனந்த் பாபு இருந்துள்ளார்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்து மூதாட்டியை மலர்க்கொடி மற்றும் அவரது மகன் ஆனந்த் பாபு இருவரும் சேர்ந்து கட்டையில் மூதாட்டி முத்துலட்சுமியை தாக்கி உள்ளனர். இதில் முத்துலட்சுமி அலறி துடித்துள்ளார். இதனை அடுத்து, அங்கிருக்கு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துலட்சுமியை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கட்சியில் இருந்து நீக்கம்


இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியை கொலை செய்ததாக ஆனந்த் பாபுவை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மலர்க்கொடியை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதான ஆனந்த் பாபு அதிமுகவில் திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் இருந்தார். இந்த கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஆனந்த் பாபுவை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். அண்மைக் காலங்களில்   வயதானவர்கள் குறிவைத்து  கொலை செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

சமீபத்தில் கூட, நாமக்கல் மாவட்டத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்டார். 67 வயதான மூதாட்டி மர்ம நபர்கள் கழுத்தறுத்து கொலை செய்து, அவரிடம் இருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்ய்ப்பட்டதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us