AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்… மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. ஒடிசாவில் அதிர்ச்சி

Odisha Crime News : ஒடிசா மாநிலத்தில் முட்டை கறி சமைக்காத ஆத்திரத்தில், மனைவியை கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவி இரும்பு கம்பியால் தலையில் பலமுறை அடித்தே கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்… மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. ஒடிசாவில் அதிர்ச்சி
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Published: 04 Jun 2025 07:15 AM IST

ஒடிசா, ஜூன் 04 :  ஒடிசா மாநிலத்தை மனைவியை, கணவர் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  முட்டை கறி சமைக்காததால் ஆத்திரத்தில் மனைவியை, கணவர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  நாட்டில் பெண்களுக்கு எதிரான கொலை, வன்முறை சம்பவங்கள தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெரிந்த நபர்களே விட தெரியாத நபர்ளே இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றன.  இந்த நிலையில், வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று  நடந்துள்ளது.

முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்

முட்டை கறி சமைக்காததால் ஆத்திரத்தில் மனைவியை, கணவர் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலம் பந்தசாஹி எனும் பகுதியைச் சேர்ந்தவர் லாமா பாஸ்கே. இவரது மனைவி பசந்தி லாமா. இந்த தம்பதிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில், லாமா பாஸ்கே அவரது மனைவி தாக்கியும் இருக்கிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று லாமா பாஸ்கே வேலை முடிந்து மதிய நேரத்தில் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, சாப்பாடு போட சொல்லி இருக்கிறார். ‘

அப்போது, மனைவி பசந்தி பாஸ்கே, அவருக்கு சாதம் மற்றும் குழம்பு வைத்திருக்கிறார். இதனால், கோபப்பட்ட லாமா பாஸ்கே ஏன் முட்டை கறி சமைக்கவில்லை என கேட்டுள்ளார். இதில், இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில், மனைவி பசந்தி பாஸ்கே, அவர் தொடர்ந்து தாக்கி உள்ளார்.

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

அருகில் கிடந்த இரும்பு கம்பியால் அவரது தலையில் பலமுறை அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்க முடியாமல் மனைவி பசந்தி பாஸ்கே அலறி துடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே சம்பவ இடத்திக்கு வந்து பார்த்தனர்.

அப்போது, பசந்தி பாஸ்கே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பசந்தி பாஸ்கேவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இதனை அடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மனைவியை கொலை செய்ததாக, லாமா பாஸ்கே கைது செய்ப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  முட்டை கறி சமைக்காததால், பெண் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us