AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற இளைஞர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி!

Chennai Woman Murder : சென்னையில் இளம்பெண்ணை காதல் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணை கொலை செய்துவிட்டு, இளைஞரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததை அடுத்து, இளம்பெண்ணை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற இளைஞர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 03 Jun 2025 13:41 PM IST

சென்னை,  ஜூன் 03 : சென்னையில் இளம்பெண்ணை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை கொலை செய்த இளைஞர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். அதே பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (19). இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்தாக தெரிகிறது. கோடை விடுமுறையில் பகுதி நேர வேலைக்காக இவர்கள் சென்னை செல்ல திட்டமிட்டனர். அதன்படியே , அவர்கள் சென்னைக்கு சென்றனர். ஆகாஷின் மூத்த சகோதரர் அவர்களுக்கு அங்கு உதவினார். அவர் இருவரையும் ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்தனர். இதனை அடுத்து, ஆகாஷ் மற்றும் அபிநயாவும் ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற இளைஞர்

அங்கிருந்து இருவரும் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில், 2025 ஜூன் 2ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஆகாஷ் தூக்கில் தொங்கிய இருப்பதை அக்கம் பக்கத்தில் உள்ள ஒருவர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

இதனை அடுத்து, உடனே அக்கம் பக்கத்தின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அபிநயா ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார். ஆகாஷ் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண் அபிநயாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும், ஆகாஷ் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னையில் அதிர்ச்சி

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இருவருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டடு வந்துள்ளது. சம்பவத்தன்றும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால், ஆத்திரத்தில் ஆகாஷ், அபிநயாவை கழுத்தறுத்து கொலை செய்துவிட்து, அவருக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீடு புகுந்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருதலைக் காதலால், இளைஞர் ஒருவர் மாணவியை மார்பு, கழுத்து, முதுகில் குத்திக் கொடூரமாக கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

இளம்பெண்  அஷ்விகாவை நீண்ட  நாட்காள ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.  ஆனால், இந்த காதலுக்கு அந்த பெண் மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

Follow Us