Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாப்பிள்ளை பிடிக்கல.. பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு.. கதறிய பெற்றோர்!

Dharmapuri Woman Doctor Suicide : தருமபுரியில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்தவமனையிலேயே தவறான மருந்தை ஊசியில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது அறையில் 40 தூக்க மாத்திரிகளையும், ஊசிகளையும் போலீசார் கைப்பற்றினர்.

மாப்பிள்ளை பிடிக்கல.. பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு..  கதறிய பெற்றோர்!
மாதிரிப்படம்Image Source: Pinterest
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 03 Jun 2025 13:45 PM

தருமபுரி, ஜூன் 03 : தருமபுரி மாவட்டம் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால், மன உளைச்சலில் இருந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  தருமபுரி மாவட்டம் ஹரிஹரநாத சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோனிகா (27). பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்த மோனிகா, கடந்த இரு ஆண்டுகளாக தருமபுரியில் உள்ள பிஜிஆர் என்ற தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கிடையில், 2025 மே 1ஆம் தேதி மாலை 7 மணியளவில் மோனியாக வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார்.

பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு

அங்கு நோயாளிகளை பார்த்து முடித்துவிட்டு, நள்ளிரவில் மருத்துவமனையில் உள்ள தனது அறைக்கு சென்றிருக்கிறார். இதனை அடுத்து, அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் வெளிநோயாளளி சிகிச்சைக்காக மோனிகாவை எழுப்ப செவிலியர்கள் அவரது அறைக்கு சென்றிருக்கின்றனர்.

அவரது அறை உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால், செவிலியர் கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மருத்துவர் மோனிகா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், மோனிகாவின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அதிர்ச்சி காரணம்

இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையிலேயே கதறி அழுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் மோனிகாவின் கைப்பையை சோதனை செய்ததில், அவரிடம் சுமார் 40 தூக்க மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த அறையில் ஊசிகளும் இருந்துள்ளன.

இதில், பெண் மருத்துவர் தனக்கு தானே, மருந்தை ஊசியில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், பெற்றோர் பார்த்த வைத்து மாப்பிள்ளை பிடிக்காததால், நீண்ட நாட்களாக மோனிகா மன உளைச்சலில் இருந்துள்ளதார்.

இதனால், இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் பெற்றோரிடம் கூறி இருக்கிறார். இருப்பினும் நிச்சயதார்த்தம் நடந்தால், மன உளைச்சலில் இருந்த மோனியாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)