Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதலுக்கு எதிர்ப்பு.. கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு.. 9 மாத சிசுவும் பலியான சோகம்!

Tirupattur Crime News : திருப்பத்தூர் மாவட்டத்தில் 9 மாத கர்ப்பணி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் உயிரிழந்ததால், மன உளைச்சலில் இருந்த கர்ப்பணி, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

காதலுக்கு  எதிர்ப்பு.. கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு.. 9 மாத சிசுவும் பலியான சோகம்!
மாதிரிப்படம்Image Source: Pinterest
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Jun 2025 08:29 AM

திருப்பத்தூர்,  ஜூன் 01 :  திருப்பத்தூர்  மாவட்டத்தில் கர்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், காதலன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, கர்ப்பிணி பெண்ணும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நிதில் ராகுல் (24). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் காவேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணி. இவர்கள் இரண்டு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இரண்டு பேரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு

இதனை அடுத்து, பெண் தரணி கர்ப்பமடைந்தார். இதனால், நிதில் ராகுல் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். இதற்கு இருவீட்டாரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பெற்றோரிடம் நீண்ட நாட்களாக சண்டையிட்டும் இருந்துள்ளார்.

இருப்பினும், அவரது பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், மனமுடைந்த ராகுல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த தரணி மிகவும் மன வேதனையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், காவேரி காவேரிப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தரணி தங்கி இருந்தார். காதலன் உயிரிழந்தது குறித்து மன உளைச்சலில் இருந்த தரணி, 2025 மே 31ஆம் தேதியான நேற்று அதிகாலை வீட்டை வீட்டு வெளியே சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடும் திரும்பவில்லை.

நடந்தது என்ன?

இதனால், அவரது உறவினர்கள் அங்குமிங்கும் தேடி பார்த்துள்ளனர். அப்போது, ரயில் தண்டவாளத்தில் கர்ப்பணி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கியனார்.

விசாரணையில் பெண் தரணி என்று  தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அப்போது, அவர் 9 மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, 9 மாத சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தது.

இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். காதலன் உயிரிழந்த துக்கத்தில், காதலியும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)