Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாடிய கணவன்.. கண்டித்ததால் கழுத்தை நெறித்து மனைவி கொலை!

Husband Killed Wife In Madhya Pradesh | மத்திய பிரதேசத்தில் திருமணமான ஒருசில மாதங்களில் கணவன் வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அதனை அவரது மனைவி கேள்வி கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த அவர் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாடிய கணவன்.. கண்டித்ததால் கழுத்தை நெறித்து மனைவி கொலை!
கொலை செய்த நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 03 Dec 2025 09:11 AM IST

போபால், டிசம்பர் 03 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலம், ரிவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரஜத். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த நேஹா என்ற பெண்ணுடன் 2025, மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கை நன்றாக சென்ற நிலையில், பப்ஜி விளையாட்டின் மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜத் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். குறிப்பாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துக்கொண்டு பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாடிய கணவன்

கணவர் இவ்வாறு வேலைக்கு செல்லாமல், பொறுப்பற்று பப்ஜி விளையாடி வந்தது நேஹாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் வேலைக்கு செல்லுமாறு நேஹா தனது கணவரிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார். இந்த நிலையில், நவம்பர் 27, 2025 அன்று நேஹா தனது கணவரை வேலைக்கு செல்ல கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது அப்படியே இருவருக்கும் இடையேயான கடும் வாக்குவாதமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் இருந்து ஐதராபாத் வர இருந்த இண்டிகோ விமானத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு சம்பவம்!

வேலைக்கு செல்ல கூறியதால் மனைவி கொலை

கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மிகுந்த ஆத்திரமடைந்த ரஜத் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த நேஹாவின் உடல் ஒரு நாள் முழுவதும் அங்கேயே கிடந்துள்ளது. நவம்பர் 28, 2025 அன்று அதிகாலை தான் நேஹா உயிரிழந்தது குறித்து அவரது கிராம மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : SIR பணிச்சுமை.. உத்தர பிரதேசத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி ஆசிரியர் தற்கொலை!

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேஹாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நேஹாவை கொலை செய்துவிட்டு தலைமறைவான அவரது கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பப்ஜி விளையாடாமல் வேலைக்கு செல் என்று சொன்னதால் கணவன், மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.