AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமணம் செய்ய கோவா சென்ற ஜோடி.. பெண்ணை கொன்று உடலை காட்டில் வீசிய காதலன்… அதிர்ச்சி பின்னணி!

Goa Crime News : கோவாவில் இளம்பெண்ணை அவரது காதலன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து கோவா சென்ற நிலையில், அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இளம்பெண்ணை காதலன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

திருமணம் செய்ய கோவா சென்ற ஜோடி.. பெண்ணை கொன்று உடலை காட்டில் வீசிய காதலன்… அதிர்ச்சி பின்னணி!
கோவாவில் பெண் கொலைImage Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 18 Jun 2025 20:47 PM IST

பெங்களூர், ஜூன் 18 : கோவாவில் காதலியை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக, இருவரும் கோவா சென்ற நிலையில், அங்கு ஏற்பட்ட பிரச்னையில் காதலியை, இளைஞர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் கெவின் (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரோஷினி மோசஸ் (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவருக்கு காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி, இருவரும் சமீபத்தில் கோவாவுக்கு சென்றிருக்கின்றனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல், திருமணம் செய்து கொள்ள கோவாவுக்கு சென்றிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில், தெற்கு கோவாவில் பிரதாப் நகர் பகுதியில் உள்ள காட்டில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காதலியை கொடூரமாக கொன்ற காதலன்

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது, அந்த பெண் கழுத்தறுக்கப்பட்டு கிடந்துள்ளார். இதனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இதனை அடுத்து, அந்த பெண் யார்… எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, இளம்பெண்ணின் காதலனே அவரை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.  அதாவது, பெங்களூருவில் இருந்து கோவாவுக்கு திருமணம் செய்து கொள்வதற்காக இருவரும் வந்துள்ளனர்.

ஆனால், வந்த இடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. தொடர்ந்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சஞ்சய், பெண் ரோஷியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், உடலை காட்டுப் பகுதியில் வீசி விட்டு, மீண்டும் பெங்களூருவுக்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

கோவாவில் நடந்த சம்பவம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த இளைஞரை 24 மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்துள்ளனர். பின்னர், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து, பெண்ணின் உடல் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, ஜார்க்கண்டில் திருமணமான 36 நாட்களில் கணவருக்கு விஷம் கொடுத்து மனைவி கொலை செய்துள்ளார். திருமணமான முதலே இருவருக்கு பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், அவருடன் வாழ பிடிக்காமல், இளம்பெண், கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொண்டுத்துள்ளார். இதில், அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, பெண்  சுனிதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us