AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மூதாட்டி நேர்ந்த கொடூரம்.. தப்ப முயன்ற இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.. கடலூரில் பரபரப்பு!

Cuddalore Crime News : கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். இந்த வழக்கில் சந்திரவேலை கைது செய்ய முயன்றபோது, அவர் தப்ப முயன்றால் போலீசார் அவரை சுட்டுப் பிடித்துள்ளனர்.

மூதாட்டி நேர்ந்த கொடூரம்.. தப்ப முயன்ற இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்..  கடலூரில் பரபரப்பு!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Jun 2025 14:05 PM IST

கடலூர், ஜூன் 17 : கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். இந்த வழக்கில் சந்திரவேலை கைது செய்ய முயன்றபோது, அவர் தப்ப முயன்றால் போலீசார் அவரை சுட்டுப் பிடித்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயதான மூதாட்டி கௌசல்யா. இவர் தினமும் புலவனூர் சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், சம்பவத்துன்று மூதாட்டி கௌசல்யா நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் மதுபோதையில் இளைஞர்கள் சிலர் இருந்துள்ளனர். அப்போது, மூதாட்டியை வழிமறித்து இளைஞர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மூதாட்டி நேர்ந்த கொடூரம்

மேலும், அவரை அருகில் உள்ள காட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.  வாயில் மண்ணை கொட்டி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோது, மூதாட்டி அணிந்திருந்த ஒரு சவரன் நகைகளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சுமார்  மூன்றரை சவரன் நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.  மூதாட்டியின் அலறல் சத்தும் கேட்டு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு  நடத்தினர்.  மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு  செய்து விசாரணையை தொடங்கினர். இந்த கொடூர செயலில் 4 பேர் கொண்ட செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

தப்ப முயன்ற இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்

அப்போது,  இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவேலுவை காடாம்புலியூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சுந்தரவேலுவை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர் தப்பிக்க முயன்றார். அப்போது, அவரது காலில் போலீசார் சுட்டனர். உடனே, அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது சிகிச்சைக்கு பிறகு, சுந்திரவேலுவிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரிடம் விசாரணையின் அடிப்படையில், மீதமுள்ள 3 பேரை கண்டுபிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு தொடர்ந்து  நடவடிக்கை எடுத்து வருகிறது.  இருப்பினும், கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அண்மையில் கூட,  நாமக்கல் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர் 67 வயதான சாமியாத்தாள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் வீட்டிற்கு அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Follow Us