Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருமணமான 36 நாட்கள்.. கணவருக்கு விஷம் கொடுத்து கொன்ற மனைவி.. பகீர் தகவல்கள்

Jharkhand Crime News : ஜார்க்கண்டில் திருமணமான 36 நாட்களில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், சாப்பாட்டில் விஷம் கலந்து மனைவி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருமணமான 36 நாட்கள்.. கணவருக்கு விஷம் கொடுத்து கொன்ற மனைவி.. பகீர் தகவல்கள்
மாதிரிப்படம்Image Source: Pinterest
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Jun 2025 15:38 PM

ஜார்க்கண்ட், ஜூன் 14 : ஜார்க்கண்டில் திருமணமான 36 நாட்களில் கணவனுக்கு விஷம் கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, 22 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ரங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் புத்நாத் சிங். அவருக்கு சத்தீஸ்கரின் ராம்சந்திரபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள விஷுன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுநாத் சிங்கின் மகள் சுனிதாவை 2025 மே 11ஆம் தேதி அன்று திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு மறுநாள் பெண் சுனிதா தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியபோது, இவருக்கு பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தனக்கு புத்நாத் சிங்குடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு அவரது பெற்றோர் வீட்டிலேயே சுனிதா இருந்துள்ளார். இதனால், இருவீட்டாரும் பிரச்னை முடிவுக்கு கொண்டு வர நினைத்தனர். இருவீட்டாரும் சம்மாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கணவருக்கு விஷம் கொடுத்து கொன்ற மனைவி

அதைத் தொடர்ந்து, சுனிதா, புத்நாத் சிங்குடன் வீட்டிற்கு சென்றார். அதன்பிறகும் இருவருக்கு பிரச்னை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து, 2025 ஜூன் 14ஆம் தேதி இருவரும் சத்தீஸ்கரில் உள்ள சந்தைக்கு சென்றிருக்கின்றனர். விவசாய பயன்பாட்டிற்கு பூச்சிக்கொல்லி மருந்து தேவை என்று கூறி, சந்தையில் இருந்து புத்நாத்தை பூச்சிக்கொல்லி மருந்து வாங்க சுனிதா வற்புறுத்தியதாக தெரிகிறது.

2025 ஜூன் 15ஆம் தேதி இரவு சுனிதா தனது கணவருக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்துள்ளார். அதை சாப்பிட்ட கணவன் புத்நாத் எழுந்திருக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது தாய், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

திருமணமான 36 நாட்களில் நடந்த சம்பவம்

அப்போது, புத்நாத்தை, மனைவி சுனிதா விஷம் கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, சுனிதாவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய ரங்கா காவல் நிலைய பொறுப்பாளர், “தாயின் புகாரின் அடிப்படையில் உயிரிழந்தவரின் மனைவியை நாங்கள் கைது செய்துள்ளோம்.

பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. அறிக்கை வந்த பிறகு மரணத்திற்கான காரணம் எங்களுக்குத் தெரியும். மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார். இது தொர்பாக பெண் சுனிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருமணமான 36 நாட்களில் கணவனை மனைவி விஷம் கொடுத்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்ற கணவர் ராஜா கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.