Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மேகாலயா ஹனிமூன் கொலை.. காட்டி கொடுத்த தாலி.. போலீசார் சொன்ன பகீர் தகவல்கள்!

Meghalaya Honeymoon Murder Case | மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்றிருந்த நிலையில், மனைவியின் சதி திட்டத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக போலீசார் மேலும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.

மேகாலயா ஹனிமூன் கொலை.. காட்டி கொடுத்த தாலி.. போலீசார் சொன்ன பகீர் தகவல்கள்!
ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Jun 2025 15:13 PM

புதுடெல்லி, ஜூன் 12 : மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் (Meghalaya Honeymoon Murder Case) தாலி மற்றும் மோதிரம் மூலம் தங்களுக்கு துப்பு துலங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புதுமன தம்பதி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு சென்ற நிலையில், கணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன மனைவியை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கொலை செய்த கூட்டாளிகளுடன் கொலை செய்யப்பட்டவரின் மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், இந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

ஹனிமூனில் வைத்து கணவனை கொலை செய்த மனைவி – கூட்டாளிகளுடன் கைது

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்கள் ஹனிமூனுக்காக மேகாலயா சென்றுள்ளனர். அப்போது தம்பதி காணாமல் போன நிலையில், ராஜா ரகுவன்ஷி சடலமாக மீட்கப்பட்டார். காணாமல் போன சோனத்தை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உத்தர பிரதேசத்தில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். சோனம் திருமணத்திற்கு முன்னதாக தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக காதலனின் திட்டத்தின் அடிப்படையில் ஆள் வைத்து ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தது தெரிய வந்தது.

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு – திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட காவல்துறை

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் தங்களுக்கு தாலி செயின் மூலம் துப்பு துலங்கியதால போலீசார் தெரிவித்துள்ளனர். மேகாலயாவில் சோனம் மற்றும் ரகுவன்ஷி தங்கியிருந்த அறையில் சோனம் அணிந்திருந்த தாலி மற்றும் மோதிரம் இருந்தது. புதியதாக திருமணமான பெண் ஏன் தனது தாலி மற்று மோதிரத்தை விடுதி அறையில் கழட்டி வைக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜா ரகுவன்ஷி, சோனம் தங்கியிருந்த விடுதி அறைக்கு அருகிலே கொலையாளிகள் தங்கியிருந்ததாகவும், புகைப்படம் எடுப்பதற்காக ராஜாவை சோனம் அழைத்துச் சென்ற நிலையில், கொலையாளிகளும் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். சோனம் புகைப்படம் எடுப்பதற்காக சற்று விலகி சென்ற நிலையில், கொலையாளிகள் ராஜாவை கொலை செய்து அங்குள்ள குப்பையில் புதைத்துள்ளனர். ராகாவின் உடலை புதைப்பதற்காக சோனம், கொலையாளிகளுக்கு உதவி செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலையாளிகள் மூன்று ஸ்கூட்டர்களில் வந்ததாகவும், ராஜாவை கொலை செய்து விட்டு இரண்டு கொலையாளிகள் ஒரு ஸ்கூட்டரிலும், மற்றொரு கொலையாளியுடன் சோனமும் சென்றதாகவும் போலீசார் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.