AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹனிமூனில் கணவனை காதலர் உதவியுடன் கொலை செய்த மனைவி – உண்மையில் நடந்தது என்ன?

Meghalaya Honeymoon Murder: மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகியோர் திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக கடந்த மே 20, 2025 அன்று மேகாலாயா சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் மர்ம நபர்களால் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் சோனம் தனது காதலருடன் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஹனிமூனில் கணவனை காதலர் உதவியுடன் கொலை செய்த மனைவி – உண்மையில் நடந்தது என்ன?
ராஜா ரகுவன்ஷி - சோனம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Jun 2025 17:43 PM IST

மத்தியப் பிரதேசத்தை (Madhya Pradesh) சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் தம்பதியினருக்கு கடந்த மே 15, 2025 அன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது, திருமணம் முடிந்த கையோடு, இருவரும் கடந்த மே 20,2025 அன்று மேகாலயாவுக்கு (Meghalaya), ஹனி மூன் சென்றனர். அங்கு மூன்று நாட்கள் புதுமண தம்பதியினர் இருவரும் மேகாலயா பகுதிகளின் அழகை ரசித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த மே 23, 2025 அன்று சோனம் தனது கணவரிடம் புகைப்படம் எடுக்கலாம் என்று சொல்லி வனப்பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேர் ராஜா ரகுவன்ஷியைத் தாக்கி கொலை செய்திருக்கின்றனர். ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகிய இருவரும் காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் உடல் பள்ளத்தாக்கில் கிடைத்திருக்கிறது.

ராஜா கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரை தலையின் முன்பும் பின்பும் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து சோனம் குறித்து விசாரித்த போது அவர் கடந்த ஜூன் 8, 2025 அன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிபூரில் உள்ள ஒரு தாபாவில் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார். அவரை மீட்ட கவல்துறையினர் அருகில் உள்ள காசிப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர்.

சோனமை விசாரணைக்காக மேகாலயா அழைத்து செல்லும் காவல்துறையினர்

 

காவல்துறையினரின் விசாரணையில் சிக்கிய சோனம்

இந்த நிலையில் குணமடைந்த சோனமிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, யாரோ தன்னை மயக்கமடைய செய்து இங்கே கொண்டு வந்தார்கள் என தெரிவித்திருக்கிறார். இது காவல்துறையினரின் சந்தேகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

உண்மையில் நடந்தது என்ன?

கடந்த மே 20, 2025 அன்று மேகாலயாவுக்கு ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஹனி மூன் சென்ற போது சோனமின் காதலர் ராஜ் குஷ்வாஹா கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரை ராஜாவை கொலை செய்வதற்காக அனுப்பியிருக்கிறார். இதற்கு சோனமும் உடந்தையாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் மேகாலயா வந்த 3 பேரும் ஆன்லைனில் கத்தியை ஆர்டர் செய்து வாங்கியிருக்கின்றனர். பின்னர் திட்டமிட்டபடி சோனம் தனது கணவர் ராஜாவை வனப்பகுதிக்குள அழைத்து வர, அவரை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருக்கின்றனர்.

காவல் துறையினரின் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சோனம், அவரது காதலர் ராஜ் குஷ்வாஹா மற்றும் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Follow Us