Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பக்ரீத் பண்டிகையில் தன்னையே கடவுளுக்கு தருவதாக தற்கொலை செய்துக்கொண்ட முதியவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Man Sacrifices Himself on Bakrid | நேற்று (ஜூன் 07, 2025) இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், பக்ரீத் பண்டிகைக்கு ஆடு, மாடுகளை பலி கொடுப்பதை போல தன்னை தானே கடவுளுக்கு கொடுப்பதாக 60 வயது நபர் ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

பக்ரீத் பண்டிகையில் தன்னையே கடவுளுக்கு தருவதாக தற்கொலை செய்துக்கொண்ட முதியவர்.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Jun 2025 10:40 AM

லக்னோ, ஜூன் 08 : நேற்று (ஜூன் 07, 2025) இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடற்கரைகள், மசூதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பலி கொடுப்பது வழக்கமாக உள்ள நிலையில், லக்னோவை சேர்ந்த முதியவர் ஒருவர் தன்னையே கடவுளுக்கு கொடுக்கும் வகையில், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகை

இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது பக்ரீத். பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாளாகவும், தியாக திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கொண்டாடுவர். பக்ரீத் பண்டிகை தியாகத்தை நினைவுப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் நிலையில், தங்கள் வீடுகளில் வெட்டப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் இரைச்சிகளை ஏழை, எளிய மக்களுக்கு பகிர்ந்தளித்து கொண்டாடுவதை இஸ்லாமியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

பக்ரீத் பண்டிகையில் தன்னையே கடவுளுக்கு கொடுத்த இளைஞர் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோவை சேர்ந்த முகமது (வயது 60) என்ற நபர், இவர் பக்ரீத் பண்டிகையான நேற்று (ஜூன் 07, 2025) தனது தொண்டையை கத்தியை வைத்து கிழித்துக்கொண்டுள்ளார். அவரில் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் சென்று பார்த்தபோது முகமது ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

யாரும் என்னை கொலை செய்யவில்லை – கடிதம் எழுதி வைத்த முகமது

முகமது தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், நான் கடவுளுக்கு என்னையே கொடுக்கிறேன். யாரும் என்னை கொலை செய்யவில்லை. என்னை மிகவும் அமைதியுடன் அடக்கம் செய்யுங்கள் என்று எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி, தான் எங்கே புதைக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

பக்ரீத் பண்டிகை அன்று தன்னையே கடவுளுக்கு பலி கொடுப்பதாக முதியவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.