AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமணமான 15 நாட்களில் கணவனை வெட்டிக்கொலை செய்த மனைவி.. மகாராஷ்டிராவை உலுக்கிய சம்பவம்..

Crime: மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி பகுதியில் திருமணமான 15 நாட்களில் கணவனை கோடாரியால் மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான ராதிகா 54 வயதான அணிலை வலுகட்டாயமாக திருமணம் செய்து வைத்ததன் காரணமாக இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமணமான 15 நாட்களில் கணவனை வெட்டிக்கொலை செய்த மனைவி.. மகாராஷ்டிராவை உலுக்கிய சம்பவம்..
Maharastra Crime
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Jun 2025 13:16 PM IST

மேகலாயாவில் தேன் நிலவுக்கு சென்றபோது மனைவி ஆட்களை வைத்து கணவனை கொலை செய்த வழக்கு நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக மகாராஷ்டிராவில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிராவின் சாங்லி (Maharastra – Sanghli) மாவட்டத்தில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டதாக கூறி புதுமணப்பெண் தனது கணவரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான ராதிகா பால்கிருஷ்ணா இங்க்லே என்ற பெண் தனது கணவரை திருமணம் முடித்த 15 நாட்களுக்குப் பிறகு கோடாரியாள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. வாட் பூர்ணிமா (Vat Purnima) அன்று இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. வாட் பூர்ணிமா என்பது கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக மனைவிகள் விரதம் இருந்து பிரார்த்தனை செய்யும் ஒரு முறையாகும்.

கொலை செய்ய காரணம் என்ன?

புதன்கிழமை இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி இடைவெளியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. 54 வயதான அணில் தனாஜி லோகண்டேன, சதாரா மாவட்டத்தில் உள்ள வாடி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். 54 வயதான அணில் தனாஜி லோகண்டே இரண்டு மகள் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது முதல் மனைவி புற்றுநோயால் இறந்த காரணத்தால் உறவினர்கள் சேர்ந்து இவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்துள்ளனர். ராதிகாவின் விருப்பத்திற்கு மாறாக இந்த திருமணம் நடைபெற்றதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. மே 17ஆம் தேதி ராதிகா மற்றும் அணில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

வாட் பூர்ணிமாவின் போது ராதிகா தனது கணவனை கோடரியால் தலையில் மற்றும் கைகளில் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராதிகாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் கொலைக்கான காரணம் தற்போது வரை தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

மே பதினொன்றாம் தேதி திருமணம் செய்து கொண்ட ஒரு மாதத்திற்கு பின் மேகாலயாவுக்கு தேன்நிலவு சென்றபோது கணவரை ஆட்கள் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. கணவன் ரகுவன்ஷியை கொலை செய்த சம்பவத்தில் மனைவி சோனமை சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow Us