AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே உடம்பில் 2 தலைகள்- 4 கண்கள்.. குஜராத்தில் சிக்கிய விசித்திர பாம்பு.. பின்னணியில் உள்ள உண்மை!

Gujarat 2 Headed Wolf Snake : குஜராத் மாநிலத்தில் 2 தலைகள் மற்றும் 4 கண்கள் உடைய ஒநாய் வகையை சேர்ந்த அரிய வகைப பாம்பு மீட்கப்பட்டது. காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட பாம்பை வனவிலங்கு மீட்பு பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர் .

ஒரே உடம்பில் 2 தலைகள்- 4 கண்கள்.. குஜராத்தில் சிக்கிய விசித்திர பாம்பு.. பின்னணியில் உள்ள உண்மை!
இரு தலை உடைய பாம்பு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Oct 2026 14:35 PM IST

குஜராத் மாநிலம், தாஹோத் மாவட்டத்தில் இருந்து இரண்டு தலை உடைய அரிதான பாம்பு ஒன்று மீட்கப்பட்டது வனவிலங்கு மீட்பு பணியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்பூர் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த அரிதான விஷமற்ற ஓநாய் பாம்பு என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை ஓநாய் பாம்புகள் விஷம் இல்லாததாகும். இது மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவையாக கருதப்படுகின்றன. அகஸ்னி கிராமத்தில் அந்த பகுதி மக்கள் பாம்பை கண்டறிந்து தஹோத் பிரகிருதி மித்ரா மண்டல் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரிய வகை பாம்பை மீட்டு கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்காக தஹோத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாம்பானது சுமார் 6 அடி நீளமும் ஒரே உடலில் 2 தனித்தனி தலைகளும் உள்ளன.

2 தலைகள் – 4 கண்கள் கொண்ட அரிய வகை பாம்பு

ஒவ்வொரு தலைக்கும் அதற்கென ஒரு ஜோடி கண்கள் உள்ளது. இது இருதலை அமைப்பு எனப்படும் ஒரு நிலையின் அறிய உதாரணமாக விளங்குகிறது. இரு தலை என்பது ஒரு விலங்கின் ஒரே உடலில் 2 தலைகள் உருவாகும் ஒரு வளர்ச்சி குறைபாடு ஆகும். கரு வளர்ச்சியின் போது உடல் உதாரணமாக வளர்ச்சி அடையாத சமயத்தில் இது போன்ற நிகழ்வு ஏற்படுகிறது. இந்த நிலை பாம்புகள் மற்றும் பிற உயிரினங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும், இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை ஆகும்.

மேலும் படிக்க: 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன்: பாய்ந்து சென்று காப்பாற்றிய இளைஞர்

வன விலங்கு மீட்பு குழுவினர் கூறுவதென்ன

இது தொடர்பாக வனவிலங்கு மீட்பு குழுவினர் கூறுகையில், குஜராத்தில் 2 தலைகள் கொண்ட பாம்பு மீட்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். மேலும், இந்தியாவில் 2 நாகப்பாம்புகள் மற்றும் 3 ஓநாய் பாம்புகள் உள்பட இது போன்ற சில சம்பவங்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அந்த ஓநாய் பாம்பின் வயது சுமார் ஒரு ஆண்டு. இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். தற்போது, அந்தப் பாம்பின் நிலையே கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை வனவிலங்கு மீட்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் பாதிப்பு

2 காடுகளில் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். உணவு இயக்கம் அல்லது ஆபத்து ஆகியவற்றுக்கும் 2 தலைகளும் தனி தனியாக செயல்படக்கூடும் என்பதால் அவற்றின் செயல்கள் சில நேரங்களில் முரண்பாடு ஏற்படலாம். இது உணவு உண்பதையும், நகர்வதையும், வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதையும் மிகவும் கடினமாக்கும். எனவே, இந்த நிலை ஒரு விலங்கு காட்டில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: Viral Video : இனிப்புக்கடையில் கழிவறையில் வைத்து கழுவப்படும் பாத்திரம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!

Follow Us