AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கேண்டி கிரஷ் கேமில் சாதனை படைத்த பீகார் இளைஞர்.. 22,222 லெவல்களை தாண்டினார்!

Bihar Man Set New Record In Candy Crush | உலக அளவில் பலர் விளையாடும் கேண்டி கிரஷ் விளையாட்டில் இளைஞர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, அவர் சுமார் 22,222 லெவல்களை தாண்டி இந்த சாதனையை படைத்துள்ளார்.

கேண்டி கிரஷ் கேமில் சாதனை படைத்த பீகார் இளைஞர்.. 22,222 லெவல்களை தாண்டினார்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Oct 2026 23:52 PM IST

பீகார், அக்டோபர் 07 : பீகாரை (Bihar) சேர்ந்த 19 வயதான சுபம் குமார் என்ற இளைஞர் பிரபல மொபைல் கேமான கேண்டி கிரஷ் (Candy Crush) விளையாடி இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ஸில் (International Book Of Records) இடம் பிடித்துள்ளார். வெறும் பொழுதுபோக்கு அம்சமான இந்த கேண்டி கிரஷில் இதுவரை யாரும் எட்டாத மைல்கல்லை இந்த இளைஞர் எட்டியுள்ளார். இந்த நிலையில், கேண்டி கிரஷ் கேமில் சாதனை படைத்த இளைஞர் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேண்டி கிரஷ் கேமில் சாதனை படைத்த பீகார் இளைஞர்

கேண்டி கிரஷ் கேமில் ஒவ்வொரு லெவல் இருக்கும். ஒரு லெவவில் பல கேம்கள் இருக்கும். அந்த கேம்களை வெற்றிகரமாக முடித்தால் மட்டுமே ஒரு லெவலை முடித்து அடுத்த லெவலுக்கு செல்ல முடியும். இந்த இளைஞர் அவ்வாறு ஒவ்வொரு லெவலாக கடந்து வந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது அவர், இதுவரை யாரும் செய்திராத 22,222 லெவல்களை முடித்து சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : மக்கள் சேவையில் இருந்து தேச சேவை’ வரை.. 25 ஆண்டுகால மோடி ஆட்சி

சாதனை குறித்து International Book Of Records கூறுவது என்ன?

இந்த இளைஞரின் சாதனை குறித்து International Book Of Records இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், குமார் ஜூலை 05, 2026 அன்று இந்த சாதனையை செய்து முடித்தார். இந்த சாதனையை செய்யும்போது அவருக்கு 19 வயது 8 மாதங்கள் 25 நாட்கள் ஆகும். இவர் பீகார் மாநிலத்தின் திக்வாரா பகுதியை சேர்ந்தவர் என்று அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள் – மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம்

விமர்சனத்துக்கு உள்ளாகும் குமாரின் சாதனை

உலக அளவில் ஏராளமான மனிதர்கள் மிகவும் வித்தியாசமான சாதனைகளை செய்து சாதனை புத்தகங்களில் இடம்பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் தங்களது சாதனைகளுக்காக விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், தற்போது குமாரும் அதே சூழலில் உள்ளார். அவரது இந்த சாதனை குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Follow Us