AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளில் பாரபட்சம் இல்லை – மத்திய அரசு விளக்கம்

Satellite Communication Regulatory Framework: உரிமத்தின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட பாதுகாப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை நிரூபிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பையும், பயனாளர்களின் தரவுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது மூன்று நிறுவனங்களுக்குமான பாதுகாப்பு மதிப்பீட்டு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளில் பாரபட்சம் இல்லை – மத்திய அரசு விளக்கம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Oct 2026 10:39 AM IST

அக்டோபர் 8, 2026: இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஒழுங்குமுறை நடைமுறை நியாயமானதாக இல்லை என்றும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பாரபட்சமாக விதிகள் அமல்படுத்தப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று பரவி வருகிறது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே விதிமுறை – மத்திய அரசு விளக்கம்:

தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்திற்கும், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் உட்பட, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற அங்கீகார நடைமுறையை அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பூமியைச் சுற்றி நிலையாக இல்லாத செயற்கைக்கோள் சுற்றுப்பாதையை அடிப்படையாகக் கொண்டு சேவைகளை வழங்கும் மூன்று உலகளாவிய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ”புதிய முழக்கம் இவைதான்.. நாம் அதைச் செய்து முடிப்போம்” – 2047ம் ஆண்டை இலக்காக நிர்ணயித்த பிரதமர் மோடி!

இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கு அனுமதிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

உரிமத்தின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட பாதுகாப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை நிரூபிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பையும், பயனாளர்களின் தரவுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க: கேண்டி கிரஷ் கேமில் சாதனை படைத்த பீகார் இளைஞர்.. 22,222 லெவல்களை தாண்டினார்!

தற்போது மூன்று நிறுவனங்களுக்குமான பாதுகாப்பு மதிப்பீட்டு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு நிறுவனத்திற்கான பாதுகாப்பு மதிப்பீடு முழுமையாக நிறைவடைந்தவுடன், அடுத்த கட்டமாக அந்நிறுவனம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கோரி விண்ணப்பிக்க முடியும்.

ஒரே நிலையில் மூன்று நிறுவனங்கள்

தற்போதைய நிலையில், மூன்று நிறுவனங்களுமே ஏறத்தாழ ஒரே ஒழுங்குமுறை கட்டத்தில் இருப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. எனவே, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு அல்லது அதன் அமலாக்கம் நியாயமற்றது அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு எதிராக பாரபட்சமாக உள்ளது என்ற சமூக வலைதளக் கருத்து அடிப்படையற்றது மற்றும் தவறான புரிதலின் அடிப்படையிலானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow Us