Health Tips: காலையில் பல் துலக்கிய உடனே தண்ணீர் குடிக்கலாமா? எது சரியானது?
Drinking Water in Morning: பல் துலக்குவது, இரவு முழுவதும் வாயில் தேங்கியுள்ள பாக்டீரியாக்களையும் உணவுத் துகள்களையும் நீக்குகிறது. இதனால் நீங்கள் தண்ணீர் குடிக்கும்போது வாய் சுத்தமாக இருக்கும். காலையில் வாய் சுகாதாரத்தைப் பேணுவது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
காலையில் (Morning Habits) எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. பலர் இதை ஏன் செய்ய வேண்டும் என்று அறியாமலேயே பின்பற்றுகிறார்கள். சிலர் எழுந்தவுடன் தண்ணீருடன் தங்கள் நாளைத் தொடங்கும் அதே வேளையில், மற்றவர்களோ பல் துலக்கும் வரை தண்ணீரை (Water) தொடுவதே கிடையாது. பல் துலக்கிய பிறகு தண்ணீர் குடிக்க வேண்டுமா? அல்லது அதற்கு முன் குடிக்கலாமா? உங்கள் உடல் நலத்திற்கு எது சிறந்தது? என்று பலரும் அறிவதில்லை. சிலர் பல் துலக்கிய பிறகு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். மற்றவர்களோ, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியானால், எது சரியான வழி? பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டுமா? அல்லது துலக்கிய பிறகு குடிக்க வேண்டுமா? என்பது குறித்து பல் மருத்துவர்களும் சுகாதார நிபுணர்களும் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோம்.
ALSO READ: காலையில் சீக்கிரம் எழ முடியவில்லையா? இதோ சில எளிய டிப்ஸ்!
பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா?
காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் சிறிதளவு தண்ணீர் குடிப்பது பொதுவாகத் தீங்கு விளைவிப்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு முழுவதும் தூங்குவது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். எனவே, அத்தகைய நேரத்தில் தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இரவிலும் வளரும், இதன் காரணமாகவே பல் துலக்கிய பிறகு தண்ணீர் குடிப்பது அதிக சுகாதாரமான பழக்கமாகும்.




பல் துலக்கிய பிறகு தண்ணீர் குடித்தால்…
பல் துலக்குவது, இரவு முழுவதும் வாயில் தேங்கியுள்ள பாக்டீரியாக்களையும் உணவுத் துகள்களையும் நீக்குகிறது. இதனால் நீங்கள் தண்ணீர் குடிக்கும்போது வாய் சுத்தமாக இருக்கும். காலையில் வாய் சுகாதாரத்தைப் பேணுவது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பல் துலக்கிய பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் வாயைப் புத்துணர்ச்சியாக உணரச் செய்கிறது. இருப்பினும், பல் துலக்கும்போது வாய் சுத்தம் செய்தபின், தண்ணீர் குடிப்பது நல்லது.
பெரும்பாலான மக்களுக்கு, பல் துலக்குவதற்கு முன்பு ஒன்று அல்லது 2 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் எந்த உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை. ஆனால், அது கூடுதல் உடல்நல நன்மைகளை அளிக்கிறது என்பதற்கு வலுவான அறிவியல் ஆதரங்கள் எதுவும் இல்லை.
ALSO READ: குளித்த பிறகு இதை மட்டும் செய்யக்கூடாது… ஏன் தெரியுமா..?
பல் மருத்துவர்கள் கூறுவது என்ன..?
பல் ஆரோக்கியத்திற்காக, பல் துலக்கிய பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பல பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், காலையில் எழுந்தவுடன் உங்களுக்குத் தாகமாக இருந்தால், பல் துலக்குவதற்கு முன்பு வாய் கொப்பளித்து விட்டு சிறிதளவு தண்ணீர் குடிப்பதால் எந்தத் தீங்கும் ஏற்படாது. எனவே, பல் துலக்குவதற்கு முன்பும் பின்பும் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.