Health Tips: சமைக்கும் வேலை மிச்சம்.. எளிதான சமையலுக்கு ஃப்ரோசன் ஃபுட்ஸ்.. இது உடலுக்கு இவ்வளவு தீங்கா?
Side Effects Of Frozen Foods: எந்த நேரத்திலும் சிக்கன், இறால் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ஃப்ரோசன் ஃபுட்ஸ்களை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து நேரடியாக சமைப்பது எளிது. ஆனால், இந்த ஃப்ரோசன் ஃபுட்ஸ் உங்கள் உடலுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது உங்களைப் பல நோய்களுக்கு ஆளாக்கக்கூடும்.
இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக, மக்கள் தங்களது வாழ்க்கையையும், உணவு சார்ந்த விஷயங்களில் நவீன முறைக்கு மாற்றி விடுகிறார்கள். இதன் காரணமாக, ஆரோக்கியமான உணவுகளுக்கு (Healthy Foods) முக்கியத்துவம் கொடுக்காமல், மக்களின் உணவுப் பழக்கங்களும் மாறிவிட்டன. நேரமின்மையால், மக்கள் விரைவாகத் தயாரிக்கக்கூடிய உணவுப் பொருட்களை பயன்படுத்த விரும்புகிறார்கள். ஃப்ரோசன் ஃபுட்ஸ் (Frozen Foods) இந்த வகையில்தான் அடங்கும். அவை பாக்கெட்களில் பாக் பட்டிருப்பதால், அவற்றை வெட்டவோ அல்லது தோலுரிக்கவோ தேவையில்லை.
மேலும், எந்த நேரத்திலும் சிக்கன், இறால் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ஃப்ரோசன் ஃபுட்ஸ்களை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து நேரடியாக சமைப்பது எளிது. ஆனால், இந்த ஃப்ரோசன் ஃபுட்ஸ் உங்கள் உடலுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது உங்களைப் பல நோய்களுக்கு ஆளாக்கக்கூடும்.
ALSO READ: காலையில் எழுந்ததும் கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?
ஃப்ரோசன் ஃபுட்ஸ்களில் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கலாம். எனவே, நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் உணவில் ப்ரஸான பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஃப்ரோசன் ஃபுட்ஸ்களின் தீய விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்…
உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை:
ஃப்ரோசன் ஃபுட்ஸ்களில் சோடியம் அதிகமாக உள்ளது. இந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது உங்கள் உடலில் சோடியத்தின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
தசைகளுக்குத் தீங்கு:
அறிக்கையின்படி, ஃப்ரோசன் ஃபுட்ஸ்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அவற்றை அதிக அளவில் உட்கொள்வது உங்கள் உடலின் ஆற்றலைக் குறைத்துவிடும். குறைவான கலோரிகளை உட்கொள்வது உங்கள் தசைகளைப் பாதிக்கக்கூடும். இதன் காரணமாக, அதிகளவிலான சோர்வை எதிர்கொள்வது மட்டுமின்றி, உங்களை அடிக்கடி சாப்பிடவும் தூண்டும்.
உடல் எடை அதிகரிப்புப் பிரச்சனை
ஃப்ரோசன் ஃபுட்ஸ்களில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் அவற்றை அதிகமாக உட்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
ALSO READ: டீயுடன் தினமும் சிகரெட்டா..? இது இவ்வளவு ஆபத்தை தரும்.. நிறுத்துவது எப்படி?
இதயப் பிரச்சனை
ஃப்ரோசன் ஃபுட்ஸ்களில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள், கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து நல்ல கொழுப்பைக் குறைக்கின்றன, இது இதயத்திற்குத் தீங்கு விளைவிக்கும். இதய ஆரோக்கியத்தைப் பேண,ஃப்ரோசன் ஃபுட்ஸ்களை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோய் பிரச்சினை
ஃப்ரோசன் ஃபுட்ஸ்களின் புத்துணர்வைப் பாதுகாக்க ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை மேம்படுத்துகிறது. ஆனால், சாப்பிடும் இந்த வகையான உணவுகள் வயிற்றுக்குள் செரிப்பதற்கு முன்பே சர்க்கரையாக மாற்றப்படுவதால், உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கக்கூடும்.



