AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rajinikanth : எப்போதும் எனக்குத் தனியாக இருப்பது மிகவும் பிடிக்கும்.. ரஜினிகாந்த் ஓபன் டாக்

Rajinikanth Speech : தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக நடித்து வரும் இவர், முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில், தனக்குத் தனிமை மிகவும் பிடிக்கும் என்று பேசியுள்ளார். மேலும் அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

Rajinikanth : எப்போதும் எனக்குத் தனியாக இருப்பது மிகவும் பிடிக்கும்.. ரஜினிகாந்த் ஓபன் டாக்
நடிகர் ரஜினிகாந்த்
Barath Murugan
Barath Murugan | Published: 23 Jun 2025 08:50 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Superstar Rajinikanth)   திரைப்படங்கள் என்றாலே இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்களை ரஜினிகாந்த் தனது வசத்தில் வைத்துள்ளார். இவரின் நடிப்பில் பல ஹிட் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. வயதாகினாலும் திரைப்படங்களில் நடிப்பதை அவர் இன்றுவரையிலும் விடவில்லை. கோலிவுட் சினிமாவின் நடிப்பின் அரக்கன் என்று அழைக்கப்படும் இவர் பல தமிழ் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். மேலும் ரசிகர்களுக்கேற்ற படங்களையும் இவர் கொடுத்திருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வேட்டையன் (Vettaiyan) . இயக்குநர் ஞானவேல் (Director Gnanavel)  இயக்கத்தில் வெளியாகியிருந்த இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன்  (Lokesh Kanagaraj) கூலி  (Coolie ) திரைப்படத்தில் இணைந்தார்.

ரஜினியின் 171வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு அவர் ஜெயிலர் 2 படத்தில் இணைந்து நடித்த வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில், தான் எப்போது தனிமையை விரும்புவதாகவும் (prefers solitude) , மேலும் அவரின் கோபத்தைக் குறைத்ததை பற்றியும் பேசியுள்ளார்.

தனிமையை விரும்புவது பற்றி ரஜினிகாந்த் பேச்சு :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னதை ஒரு நேர்காணலில் படங்களில் நடிப்பது, பொறுப்பு மற்றும் தனிமையைப் பற்றிப் பேசியிருந்தார். அந்த நேர்காணலில் முதலில் தொகுப்பாளர் நீங்கள் கோப போடுவீர்களா? என்று கேட்டார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “சினிமாவில் ஆரம்பத்தில் நடிகராக நுழைந்திருந்த பொது எனக்கு அதிகம் கோபம் வரும், அடக்க முடியாமல் நான் இருந்திருக்கிறேன். பின் எனக்குப் பொறுப்புகளும், மக்கள் மத்தியில் மரியாதையும் ஏற்பட்ட நிலையில், அதை எனக்குள் மறைக்கவேண்டிய சூழ்நிலை அமைந்துவிட்டது. மேலும் எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம் எனக்குக் கால் பந்து விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும்.

ஆனால் நான் அதை விளையாடியதில்லை. நான் கிரிக்கெட் மற்றும் கூட்டை பந்து விளையாடியிருக்கிறேன். நான் எப்போது விரும்புவது என்னவென்றால் தனிமைதான். ஷூட்டிங்கில் முழுவதும் கூட்டத்துடன் இருப்பதால் நான், ஷூட்டிங் இல்லாத போது தனிமையை விரும்புவேன். அந்த தனிமையில் புத்தகங்களை வாசிப்பேன்” என நடிகர் ரஜினிகாந்த் உண்மையை வெளிப்படையாகப் பேசியிருந்தார். இப்படியும் ஒரு நடிகர் விரும்புவாரா என இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் இந்த பழைய நேர்காணல் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us