Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Cinema Rewind : அந்த விஷயத்தில் விஜய்யை பார்த்து எனக்குப் பொறாமைதான்.. நடிகர் சூர்யா ஓபனாக பேசிய விஷயம்!

Suriya Talk About Vijay : கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் தமிழில் பல ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில், விஜய்யிடம் அந்த விஷயம் கண்டு பொறாமைப் படுவதாகக் கூறியிருந்தார், அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

Cinema Rewind : அந்த விஷயத்தில் விஜய்யை பார்த்து எனக்குப் பொறாமைதான்.. நடிகர் சூர்யா ஓபனாக பேசிய விஷயம்!
விஜய் மற்றும் சூர்யா Image Source: Social Media
barath-murugan
Barath Murugan | Updated On: 17 Jun 2025 09:03 AM

நடிகை சூர்யா (Suriya) தமிழ் சினிமாவில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் (Nerrukku Ner) என்ற படத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய்யும் (Vijay) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நேருக்கு நேர் படத்தை இயக்குநர் வசந்த் (Vasath)இயக்க, இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) தயாரித்திருந்தார். சூர்யாவின் முதல் படமாக அமைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்று கூறலாம். இப்படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

இவருக்கு மிகவும் பிரபலத்தைக் கொடுத்த திரைப்படம்தான் நந்தா (Nandha). இந்த படத்தை இயக்குநர் பாலா (Bala) இயக்கியிருந்தார். கடந்த 2001ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் தமிழ் சினிமாவில் சூர்யாவிற்குத் தனி அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம்.

இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் சூப்பர் ஹிட்டானது. மேலும் விஜய்யுடன் இறுதியாக நடித்திருந்த பிரண்ட்ஸ் படம் கூட சூப்பர் ஹிட்டானது. இனிசியில் நடிகர் சூர்யா முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் நடனத்தைக் கண்டு பொறாமை கொள்வதாகக் கூறியிருந்தார். அதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

விஜய்யை கண்டு சூர்யா பொறாமைப்பட்ட விஷயம் :

முன்னதாக பேசிய நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, “பையன் படத்தில் நன்றாக ஆடுவான் என்று பெயர், நான் நடித்த முதல் படங்களை எல்லாம் யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொரு தடவையும் அவரை கண்டு பொறாமை பாடுவேன், அவரை வேறு யாருமில்லை கண்ணாடி போட்டு ஒன்றும் தெரியாததுபோல் அமர்ந்திருக்கிறீரே விஜய்தான். நான் அவரை பார்த்து பொறாமைப் படுகிறேன் , செத்துருக்கிறேன். மனுஷன் என்னம்மா ஆடுகிறார் படங்களில் என்று, நடனமாடுவது வேறு, ஆனால் கஷ்டமே படாமல் படங்களில் ஆடும் விஷயம் வேறு அந்த விதத்தில் நான் விஜய்க்குத் தலை வணங்குகிறேன் என்று நடிகர் சூர்யா ஓபனாக பேசியிருந்தார்.

சூர்யா மற்றும் விஜய் இணைந்து நடித்த படங்கள் :

நடிகர் சூர்யா தனது முதல் திரைப்படமாக நேருக்கு நேர் என்ற படத்திலேயே நடிகர் விஜயுடன் இணைந்துதான் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் வசந்த் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு வரவேற்புகள் கிடைத்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து கடந்த 2001ம் ஆண்டு வெளியான பிரண்ட்ஸ் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் சித்திக் இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுக்குப் பின் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் இணைந்து வேறு இந்தப் படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாமிரபரணி நதிக்கரையில் சனி பகவான்.. இந்த கோயில் தெரியுமா?
தாமிரபரணி நதிக்கரையில் சனி பகவான்.. இந்த கோயில் தெரியுமா?...
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க முடியாது...
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க முடியாது......
தப்ப முயன்ற இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.. கடலூரில் பரபரப்பு
தப்ப முயன்ற இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.. கடலூரில் பரபரப்பு...
காலணிகள் கடிப்பதிலிருந்து தப்பிக்க 6 வழிகள் என்னென்ன?
காலணிகள் கடிப்பதிலிருந்து தப்பிக்க 6 வழிகள் என்னென்ன?...
ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் சௌமியா அன்புமணி சிறப்பு வழிபாடு
ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் சௌமியா அன்புமணி சிறப்பு வழிபாடு...
மேகாலயாவில் கண்டறிய வேண்டிய 10 அழகான சுற்றுலாத் தலங்கள்..
மேகாலயாவில் கண்டறிய வேண்டிய 10 அழகான சுற்றுலாத் தலங்கள்.....
ஆண்டவன் நல்ல படங்களை சோதிப்பான், ஆனால்... கார்த்திக் சுப்பராஜ்
ஆண்டவன் நல்ல படங்களை சோதிப்பான், ஆனால்... கார்த்திக் சுப்பராஜ்...
சூப்பர் ஃபாஸ்டாக மாறிய யுபிஐ - என்ன என்ன மாற்றங்கள்?
சூப்பர் ஃபாஸ்டாக மாறிய யுபிஐ - என்ன என்ன மாற்றங்கள்?...
இஸ்ரேல் - ஈரான் பதற்றம்.. இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் பதற்றம்.. இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு...
அலட்சியத்தால் விரலை இழந்த நபர்.. சாதாரணமாக விடப்படும் உடல்நலம்..!
அலட்சியத்தால் விரலை இழந்த நபர்.. சாதாரணமாக விடப்படும் உடல்நலம்..!...
கண் திருஷ்டி பிரச்னையா?.. வீட்டு வாசலில் இதை மறக்காம செய்யுங்க!
கண் திருஷ்டி பிரச்னையா?.. வீட்டு வாசலில் இதை மறக்காம செய்யுங்க!...