Cinema Rewind : பிடித்த காட்சி.. நீக்க வேண்டாமென சொன்ன ரஜினிகாந்த்.. கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சம்பவம்!
KS Ravikumar About Rajinikanth : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்கள் ஒருவராக இருந்து வருபவர் கே.எஸ். ரவிக்குமார். இவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் பல ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது . அந்த விதத்தில் லிங்கா படத்தில் நடிக்கும்போது நடிகர் ரஜினிகாந்த் சொன்ன விஷயம் பற்றி இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்து வந்தவர் கேஎஸ் ரவிக்குமார் (KS Ravikumar). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் சூர்யா (Suriya) வரை பல பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் சினிமாவில் இயக்குநராக இருந்து வந்த இவர், தற்போது படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் வெளியான டிராகன் (Dragon) படத்தில் கூட , கதாநாயகி கயாடு லோஹரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், லிங்கா (Lingaa) படத்தை இயக்கிய போது நடிகர் ரஜினிகாந்த் சொன்ன விஷயம் பற்றிக் கூறியுள்ளார். அந்த நேர்காணலில் நடிகர் ரஜினிகாந்த் “லிங்கா படத்தில், லிங்கேஸ்வரனின் கதாபாத்திரத்தின் காட்சிகளை நீக்கவேண்டாம்” என்று கூறியதாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஓபனாக பேசியிருந்தார்.
கே எஸ் ரவிக்குமார், ரஜினிகாந்தை பற்றி சொன்ன விஷயம் :
அந்த நேர்காணலில் இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார், “லிங்கா படத்தில் அந்த லிங்கேஸ்வரன் கதாபாத்திரம் ரொம்ப நல்லதாக அமைந்துவிட்டது. ரஜினிகாந்த் சார் அந்த படத்தை எடித் செய்யும்போது பார்த்துவிட்டார், அவருக்கும் லிங்கேஸ்வரன் கதாபாத்திரம் மிகவும் பிடித்து விட்டது. நான் அவரிடம் கூறினேன் , சார் படம் ரொம்ப லாங்கா போகிறது. நிச்சயமாகக் கொஞ்சம் கட் செய்யவேண்டியது இருக்கும் என்று கூறினேன். அதற்கு ரஜினிகாந்த் சார், “லிங்கேஸ்வரன் கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருக்கிறது. நன்றாக வந்திருக்கிறது. அதை தயவுசெய்து டிரிம் பண்ணவேண்டாம்” என்று என்னிடம் கூறினார்.




நான் அவரிடம், “சார் இரண்டாவது பகுதியில் இளமையான லிங்கா கதாபாத்திரம் இருக்கிறது அதனால், காட்சிகளை குறைத்துதான் ஆகவேண்டும்” என கூறினேன் . அதற்கு ரஜினிகாந்த் சார், “இந்த லிங்கா படத்தில் லிங்கேஸ்வரன் கதாபாத்திரம்தான் ஹீரோ. லிங்கா கதாபாத்திரத்தைச் சுருக்கிக்கொள்ளுங்கள். தயவுசெய்து அதை கெடுத்துவிடாதீர்கள்” என்று ரஜினி சார் என்னிடம் கூறினார். இப்படி ரஜினிகாந்த் சார் என்னிடம் மிகவும் பீல் பண்ணி சொன்னாரு என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
லிங்கா திரைப்படம் :
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் லிங்கா. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஸ்கா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹா, ஜெகபதி பாபு போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்த படமானது மாறுபட்ட ஆக்ஷ்ன் படமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.