Cinema Rewind: சசிகுமாரை கவர்ந்த கமல், ரஜினி கேரக்டர்கள்.. என்ன படங்கள் தெரியுமா?
Sasikumar About Kamal Haasan And Rajinikanth Acting : தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகர் என பல வேலைகளைச் செய்துவருபவர் சசிகுமார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில், இவர் முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்திருந்த கதாபாத்திரங்கள் பற்றிக் கூறியிருந்தார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் உதவி இயக்குநராக சினிமாவில் நுழைந்து, பின் இயக்குநர் மற்றும் நடிகர் என அடுத்தடுத்த கட்டத்திற்குச் சென்றவர் சசிகுமார் (Sasikumar) . இவின் நடிப்பில் இறுதியாக டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சசிகுமார் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் (Simran) இணைந்து நடித்து அசத்தினார். அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவான இப்படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இப்படமானது ரெட்ரோ (Retro) மற்றும் ஹிட் 3 போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் மத்தியில் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்ததைவிடவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மொத்தமாக சுமார் ரூ. 75 கோடிகளைத் தமிழ் நாட்டில் மட்டும் வசூல் செய்திருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சசிகுமார். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்த இவை அதை தொடர்ந்து சில படங்களை இயக்கியிருந்தார்.
மேலும் படங்களை இயக்குவதைத் தொடர்ந்து நடிகராகவே சினிமாவில் முன்னேறிச் செல்ல தொடங்கினார். இந்நிலையில், முன்னதாக ஒரு நேர்காணலில் கமல்ஹாசன் (Kamal Hasan) பற்றியும், அவர் தனது இளம் வயதிலே வயதான கதாபாத்திரங்களில் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தது குறித்தும் பேசியிருந்தார். அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.




கமல் மற்றும் ரஜினி நடித்த கதாபாத்திரம் பற்றி சசிகுமார் பேசிய விஷயம் :
நடிகர் சசிகுமார் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் அவருக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தின் தொடர்ச்சியான படங்கள் தேர்ந்தெடுப்பு பற்றியும் பேசியிருந்தார். அதில் சசிகுமார், “கமல் சார் அப்பவே உள்ள படங்களில் வயதான கதாபாத்திரங்களில் நிறையத் திரைப்படங்களை பண்ணிருக்காரு. அவர் தனது இளம் வயதிலே வயதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் கடல் மீன்கள் மற்றும் நாயகன் படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாகச் சொல்லப்போனால் நாயகன் படத்தில் எவ்வளவு பெரிய ஆளுக்கு அப்பாவாக நடித்திருந்தார், நிழல்கள் ரவி சாருக்கு, நாயகன் படத்தில் கமல் அப்பாவாக நடித்திருந்தார்.
மேலும் அவர் சிப்பிக்குள் முத்து, மற்றும் சலங்கை ஒலி எனப் பல படங்களில் வயதான ரோலில் தனது இளம் வயதிலே கமல்ஹாசன் சார் நடித்திருந்தார். அந்த விஷயத்தைப் பார்த்து நடிகர் ரஜினி சாரும் பண்ண ஆரம்பித்தார். அண்ணாமலை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் ரஜினிகாந்த் சாரும் வயதான கதாபாத்திரத்தில் அப்போதே நடிக்கத் தொடங்கிவிட்டனர். சினிமாவில் வேஷம் போட வந்தாச்சு அது 60 வயதா இருந்தால் என்ன அல்லது 70 வயதா இருந்தால் என்ன?.. அதெல்லாம் பார்க்கக்கூடாது” நடிகர் சசிகுமார் ஓபனாக பேசியிருந்தார்.