Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind: தமிழ்நாடு மக்களின் அன்பு.. நெகிழ்ச்சியாக பேசிய அஜித்குமார்!

Ajith About Tamil People : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்றால் நினைவிற்கு வரும் தற்கால நடிகர்களில் பட்டியலில் அஜித் குமாரும் ஒருவர். இவர் பழைய நேர்காணல் ஒன்றில் தான் நடிக்க வந்த புதிதில் நடைபெற்ற மறக்க முடியாத சம்பவம் பற்றி தெரிவித்திருப்பார்.

Cinema Rewind: தமிழ்நாடு மக்களின் அன்பு.. நெகிழ்ச்சியாக பேசிய அஜித்குமார்!
அஜித் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Jun 2025 06:30 AM

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் ரேஸர் (Racer) , சமூக பொறுப்பாளர் மற்றும் பல உதவிகளை வழங்குபவர் எனப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அது போல ஒரு சிறந்த நடிகராகவும், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகவும் இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good bad Ugly) . இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் கூட்டணியில் உருவான இப்படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) முன்னணி நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் மற்றும் திரிஷாவின் ஜோடி மிகவும் நன்றாக இருந்தது என்றே கூறலாம்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை அஜித் கடந்த 2024ம் ஆண்டி டிசம்பர் மாதத்திலே நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து துபாய், இத்தாலி மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ் பந்தையதில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு , வெற்றி பெற்றிருக்கிறார் . இரண்டு போட்டியில் 3வது இடத்தையும் மற்றும் ஒரு போட்டியில் 2வது இடத்தையும் பிடித்திருந்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மேலும் ஒரு ஒரு ரெஸிற்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில் தமிழ்நாட்டு மக்கள் தனக்குக் கொடுத்த ஆதரவு பற்றியும், தன்னை பற்றிய வதந்திகள் பற்றியும் கூறியிருந்தார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகர் அஜித் குமார் பேசிய விஷயம் :

முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய அஜித் குமார் அதில், தனது பெயர் பற்றிய விமர்சனங்கள் பற்றியும், தமிழ் மக்கள் கொடுத்த ஆதரவு பற்றியும் பேசியிருந்தார். அதைப் பற்றி பார்க்கலாம், நடிகர் அஜித் குமார் “அஜித் குமார் என்ற பெயர் நார்த் இந்தியன் பெயர்தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நான் முழுவதுமாக படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் எனது அப்பா சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழர், எனது அம்மாதான் வட மாநிலத்தில் இருந்து வந்தவர்.

ஆனால் அஜித் குமார் நான் ஒரு தமிழன், அதில் அனைவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம், மேலும் யாரும் தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம். எனக்கு சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு நல்ல நடிகனாகவேண்டும் என்ற வெறி இருந்தது, பலரும் சொல்வது போல நான் ஒரு வட இந்தியன் என்று நினைத்துவிடுகிறார்கள். நான் முதலில் தமிழ்நாட்டு மக்களால்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன். என்னை நடிகனாக ஏற்றுக்கொண்டதே தமிழ்நாட்டு மக்கள்தான். அவர்களால்தான் நான் நடிகராக ஆனேன்” என நடிகர் அஜித் குமார் பேசியிருந்தார்.