AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Cinema Rewind: சூர்யாவை நேரில் பார்த்த தருணம்.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!

Sai Pallavis Unexpected Suriya Encounter : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து, தற்போது பான் இந்திய கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் சாய் பல்லவி. இவர் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில், சூர்யாவை முதலில் நேரில் சந்தித்தது குறித்துப் பேசியுள்ளார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

Cinema Rewind: சூர்யாவை நேரில் பார்த்த தருணம்.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!
சாய் பல்லவி மற்றும் சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jun 2025 06:30 AM IST

மலையாள சினிமாவின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தவர் நடிகை சாய் பல்லவி (Sai pallavi). இவர் சிறு வயதில் நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) மற்றும் கங்கனாவின் தாம் தூம் (Dhaam Dhoom) என்ற படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரேமம்  (Premam) என்ற படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி மலர் என்ற கதாபாத்திரத்தில் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தார். மலையாளத்தில் வெளியான இந்த படம் தமிழ், மற்றும் தெலுங்கு மக்களின் மத்தியிலும் மிகவும் பிரபலமானது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவிக்கு மலையாளத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் அமைந்தது. துல்கர் சல்மானுடன் கலி எனப் படத்தில் நடித்து பிரம்மாண்ட ஹிட் கொடுத்தார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் பிடா மற்றும் மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற படங்களிலும் நடித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழில் மாரி 2 படத்தில் முதலில் ஒப்பந்தமானார். ஆனால் இந்த படத்திற்கு முன் , தியா என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இவர் மாரி 2 படத்தில் ரவுடி பேபி என்ற பாடலில்தான் மூலம் மிகவும் பிரபலமானார். இவ்வாறு ஹிட் படங்களைக் கொடுத்த சாய் பல்லவியின் நடிப்பில் தமிழில் இறுதியாக அமரன் படம் வெளியானது.

இயக்குநர் ராஜ் குமார் பெரியசாமியின் இயக்கத்தில், வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் உருவாகிவரும் ராமாயணம் (Ramayana) படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி முன்னதாக பேசிய நேர்காணலில் சூர்யாவுடன் எதிர்பாராத சந்திப்பு பற்றிப் பேசியுள்ளனர். அவரை நேரில் சந்தித்த தருணம் குறித்துப் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யாவுடன் எதிர்பாராத சந்திப்பு பற்றிச் சாய் பல்லவி பேச்சு :

நடிகை சாய் பல்லவி அதில், “நான் தெலுங்கில் விரட்டா பர்வம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது ஒருமுறை இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் ஒரு முகவரியை அனுப்பி அங்கு வரச் சொன்னார். முன்னதாக அவர் நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை என்னிடம் பகிர்ந்திருந்தார், நானும் அவர் சாதாரணமாக சூர்யாவைச் சந்தித்திருப்பார் போல் என்று நினைத்தேன், அந்த பிறகு அவர் அனுப்பிய முகவரிக்கு நான்  சென்றேன். அங்கு அந்த வீட்டைப் பார்க்கும்போது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது, அதைப் பார்க்கும்போது இது சூர்யா சார் வீடாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

அதன் பிறகு அந்த வீட்டிற்குள் நான் சென்றேன், அப்போது நானா முதலில் ஜோதிகா மேமை பார்த்தேன் அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் நான் சூர்யா சார் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர் பின்னால் வந்தார் . அவரை நேரில் பார்த்ததும் எனக்குப் பேச்சு வரவில்லை, அவரை நேரில் சந்தித்த அதிர்ச்சியில் சரியாகக் கூட அவரிடம் பேசவில்லை, நான் அவரை நேரில் சந்தித்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கணும் என்று நடிகை சாய் பல்லவி கூறியிருந்தார். சூர்யா, சாய்பல்லவி இருவரும் 2019 ஆம் ஆண்டு வெளியான என்.ஜி.கே படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us